ஆசனூர் அருகே கரும்பு லாரியை யானைகள் வழிமறித்ததால் பரபரப்பு


ஆசனூர் அருகே கரும்பு லாரியை யானைகள் வழிமறித்ததால் பரபரப்பு
x
தினத்தந்தி 6 Aug 2021 9:32 PM GMT (Updated: 2021-08-07T03:02:12+05:30)

ஆசனூர் அருகே கரும்பு லாரியை யானைகள் வழிமறித்தது.

தாளவாடி
தாளவாடியில் இருந்து சத்தியமங்கலம் தனியார் சர்க்கரை ஆலைக்கு கரும்பு பாரம் ஏற்றி கொண்டு லாரி ஒன்று நேற்று இரவு சென்று கொண்டிருந்தது. இந்த லாரி தமிழக-கர்நாடக எல்லையான காரப்பள்ளம் அருகே சென்ற போது குட்டியுடன் யானை ரோட்டில் நின்று கொண்டிருந்தது. கரும்பு லாரியை பார்த்ததும் யானைகள் லாரியை நோக்கி ஓடின. பின்னர் அதில் இருந்த கரும்புகளை துதிக்கையால் இழுத்து தின்க தொடங்கியது. இதனால் டிரைவர் அச்சத்தில் லாரியை நிறுத்தினார். இதனால் அந்த வழியாக எந்த வாகனங்களும் செல்ல முடியவில்லை. யானையை பார்த்ததும் சற்று தூரத்திலேயே வாகனங்களை நிறுத்திக்கொண்டனர். கரும்பை ருசி பார்த்த யானைகள் சுமார் 30 நிமிடத்துக்கு பிறகு அங்கிருந்து சென்றன. அதன்பின்னரே போக்குவரத்து நிலைமை சீராகியது.

Next Story