நம்பியூா் அருகே மர்மமான முறையில் இறந்து கிடந்த 3 மாடுகள்
நம்பியூா் அருகே மர்மமான முறையில் 3 மாடுகள் இறந்தன.
நம்பியூர்
நம்பியூர் அருகே உள்ள மின்ன காட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் முருகசாமி (வயது 44). இவர் அதே பகுதியில் மாடு வாங்கி விற்கும் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். இவர் நேற்று மதியம் 3.30 மணி அளவில் தனக்கு சொந்தமான 5 மாடுகளை தனது வீட்டின் அருகே உள்ள காடுகளில் மேய்த்துவிட்டு வீட்டுக்கு ஓட்டி வந்தார். பின்னர் பாத்திரத்தில் வைத்த தண்ணீரை மாடுகள் குடித்தன.
இதில் சிறிது நேரத்தில் ஒரு மாடு மயங்கி விழுந்து இறந்தது. அதனைத் தொடர்ந்து 2 மணி நேரம் கழித்து மேலும் 2 மாடுகள் மயங்கி விழுந்து உயிரிழந்தது.
மர்மநபர்கள் யாரோ மாடுகள் குடிக்கும் தண்ணீரில் விவசாயத்திற்கு பயன்படுத்தும் யூரியாவை கலந்துள்ளனர். அவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முருகசாமி நம்பியூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story