காஞ்சீபுரம் நகரத்தில் போக்குவரத்தை சீர் செய்ய இரு சக்கர ரோந்து வாகனம்
காஞ்சீபுரம் நகரத்தில் போக்குவரத்தை சீர் செய்ய இரு சக்கர ரோந்து வாகனம் போலீஸ் சூப்பிரண்டு தொடங்கி வைத்தார்.
காஞ்சீபுரம்,
காஞ்சீபுரம் நகரத்தின் முக்கிய சாலைகளில் போக்குவரத்தை சீர் செய்ய பொன்னேரிக்கரையில் இருந்து கலெக்டர் அலுவலகம் வரை, அதேபோல் பெரியார் நகர் முதல் மூங்கில் மண்டபம் வரை இரு சக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களை சாலைகளில் தன்னிச்சையாக நிறுத்துவதை தடுப்பதற்காக புதிய இரு சக்கர 2 போக்குவரத்து ரோந்து வாகனங்களை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் சுதாகர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
பொதுமக்கள் அனைவரும் சாலை விதிகளை பின்பற்றி வாகனங்களை இயக்க வேண்டும் என்று அறிவுரை வழங்கினார்.
Related Tags :
Next Story