காலையில் வெயில் வாட்டிய நிலையில் ஈரோட்டில் திடீரென கொட்டிய மழை
காலையில் வெயில் வாட்டிய நிலையில் ஈரோட்டில் திடீரென கொட்டிய மழையால் ரோடுகளில் வெள்ளம் ஓடியது.
காலையில் வெயில் வாட்டிய நிலையில் ஈரோட்டில் திடீரென கொட்டிய மழையால் ரோடுகளில் வெள்ளம் ஓடியது.
வெயில் வாட்டியது
ஈரோட்டில் நேற்று காலை வெயில் வாட்டிய நிலையில் பிற்பகலில் திடீர் என்று கொட்டிய மழையால் சாலைகளில் வெள்ளம் ஓடியது. ஈரோடு மாவட்டத்தில் அவ்வப்போது பரவலாக மழை பெய்து வருகிறது.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு பிற்பகலில் திடீரென்று மழை கொட்டியது. கண்டம் விட்டு கண்டம் பெய்யும் மழை போன்று ஒரு பகுதியில் மழை பெய்தால் இன்னொரு பகுதியில் துளி கூட விழாத நிலையும் இருந்தது.
திடீர் மழை
இந்தநிலையில் நேற்று காலை முதல் வெயில் வாட்டியது. மதிய நேரத்தில் வெயில் அளவு அதிகமாகவே இருந்தது.
பிற்பகல் 2.30 மணி அளவில் வெயிலின் தாக்கம் குறையத்தொடங்கியது. 3 மணி அளவில் சூரியனின் தாக்கம் குறைந்து கருமேகங்கள் சூழத்தொடங்கின. 3.30 மணி அளவில் ஈரோடு பகுதியில் வானம் இருண்டது.
சுழற்காற்று வீசியதால் சாலைகளில் புழுதி பறந்தது. அதைத்தொடர்ந்து சிறு துளியாக தொடங்கிய மழை சற்று நேரத்தில் வலுத்து பெய்தது. வானத்தில் இருந்து மழை பலமாக கொட்டியது.
இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. சாக்கடை கால்வாய்களில் தண்ணீர் நிறைந்து ரோடுகளில் மழைநீர் ஓடியது.
வெள்ளம் ஓடியது
பன்னீர்செல்வம் பூங்கா, அகில்மேடு வீதி, மணிக்கூண்டு என்று அனைத்து பகுதிகளிலும் மழை நீர் வெள்ளமாக ஓடியது.
பின்னர் மழையின் வேகம் குறைந்து சிறு தூறலாக நீடித்தது. இந்த மழை காரணமாக நேற்று குளிர்ந்த காற்று வீசியது. சுமார் 1½ மணி நேரம் பெய்த மழையால் ஈரோட்டில் இயல்பு வாழ்க்கை பாதித்தது.
அகில்மேடு வீதி, வாசுகி வீதி உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் மழைநீர் கடைகள் வீடுகளுக்குள் புகுந்தது. சின்ன மார்க்கெட்டில் தண்ணீர் குட்டை போல தேங்கியது. அந்த பகுதியில் ரோட்டில் புதிதாக போடப்பட்ட தார் கழன்று சிறு ஜல்லிகளாக போக்குவரத்து பாதிப்பு ஏற்படுத்தியது. இதுபோல் நகரின் பல பகுதிகளிலும் மக்கள் பாதிப்புக்கு உள்ளானார்கள். சாஸ்தி நகர் பகுதியிலும் மழை பெய்தது. இதனால் எம்.ஜி.ஆர். வீதியில் மழை நீர் தேங்கி நின்றது.
Related Tags :
Next Story