புஞ்சைபுளியம்பட்டி அருகே நாகநாதர் கோவிலில் சிறப்பு யாக பூஜை
புஞ்சைபுளியம்பட்டி அருகே நாகநாதர் கோவிலில் சிறப்பு யாக பூஜை நடைபெற்றது.
புஞ்சைபுளியம்பட்டி அருகே உள்ள மீனம்பாளையம் கிராமத்தில் பழமையான நாகநாதர் கோவில் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகம் நடந்த 8 ஆண்டுகள் ஆனதையொட்டி கோவிலில் சிறப்பு யாக பூஜை தமிழ் முறைப்படி நடைபெற்றது.
அதனை தொடர்ந்து யாக கலசங்கள் ஊர்வலமாக வாத்திய இசை முழங்க கோவிலை சுற்றி திருவீதி உலாவாக கொண்டு செல்லப்பட்டது. பின்னர் நாகநாதர், நாவுக்கரசி அம்மனுக்கு கலசநீர் கொண்டு சிறப்பு அபிஷேகத்துடன் அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. இதில் பக்தர்கள் கலந்து கொண்டு நாகநாதரை வழிபட்டனர்.
Related Tags :
Next Story