வெண்டிபாளையத்தில் ரெயில்வே நுழைவுபாலம் பகுதியில் தேங்கும் சாக்கடை


வெண்டிபாளையத்தில் ரெயில்வே நுழைவுபாலம் பகுதியில் தேங்கும் சாக்கடை
x
தினத்தந்தி 7 Aug 2021 9:01 PM GMT (Updated: 7 Aug 2021 9:01 PM GMT)

ஈரோடு வெண்டிபாளையத்தில் ரெயில்வே நுழைவுபாலம் பகுதியில் தேங்கும் சாக்கடையால் பொதுமக்கள் அவதிப்படுகிறார்கள்.

ஈரோடு வெண்டிபாளையம் பழைய கரூர் ரோட்டில் ரெயில்வே நுழைவுபாலம் உள்ளது. இந்த பகுதியில் சாக்கடை கழிவுகள் தேங்கி பயணிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. தற்போது பாலத்தையொட்டிய பகுதிகளில் கழிவு நீர் தேங்கி பாதசாரிகள் நடந்து செல்ல முடியாத அளவுக்கு உள்ளது. துர்நாற்றம் வீசுவதால் அந்த பகுதியில் வாகனங்களில் செல்பவர்களும் சிரமப்படுகிறார்கள்.
இதுகுறித்து அந்த பகுதி பொதுமக்கள் பலமுறை புகார் தெரிவித்தும் மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்று அந்த பகுதியை சேர்ந்தவர்கள் தெரிவித்தனர். வெண்டிபாளையம் ரெயில்வே நுழைவு பாலம் வழியாக சோலாரில் இருந்து கொக்கராயன்பேட்டை பகுதிக்கு செல்பவர்கள் அதிகமாக சென்று வருகிறார்கள். இதுபோல் ஈரோட்டில் இருந்து சோலார் செல்பவர்கள் மற்றும் கொக்கராயன்பேட்டை செல்பவர்கள் அதிகமாக செல்கிறார்கள். வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும் பாதிக்கப்படும் அளவுக்கு தேங்கி உள்ள சாக்கடை கழிவை அகற்றவும், இங்கு கழிவுநீர் தேங்காமல் இருக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Next Story