துணைத்தலைவர், உறுப்பினரின் தொல்லையால் கிராம பஞ்சாயத்து தலைவி விஷம் குடித்தார்


துணைத்தலைவர், உறுப்பினரின் தொல்லையால் கிராம பஞ்சாயத்து தலைவி விஷம் குடித்தார்
x
தினத்தந்தி 8 Aug 2021 3:10 AM IST (Updated: 8 Aug 2021 3:10 AM IST)
t-max-icont-min-icon

கோலார் தாலுகாவில், கிராம பஞ்சாயத்து துணைத்தலைவர் மற்றும் உறுப்பினர் ஒருவரின் தொடர் தொல்லையால் கிராம பஞ்சாயத்து தலைவி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். அவருக்கு தனியார் மருத்துவமனையி தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கோலார்: கோலார் தாலுகாவில், கிராம பஞ்சாயத்து துணைத்தலைவர் மற்றும் உறுப்பினர் ஒருவரின் தொடர் தொல்லையால் கிராம பஞ்சாயத்து தலைவி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். அவருக்கு தனியார் மருத்துவமனையி தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

கிராம பஞ்சாயத்து தலைவி

கோலார் (மாவட்டம்) தாலுகா, கொண்டராஜனஹள்ளி கிராம பஞ்சாயத்து தலைவியாக இருப்பவர் புஷ்பா. இவருக்கு கிராம பஞ்சாயத்து துணை தலைவர் நாகேஷ் மற்றும் உறுப்பினர் விஜயகுமார் ஆகியோர் தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. தனக்கு தொல்லை கொடுப்பதை புஷ்பா பலமுறை கண்டித்துள்ளார். 

ஆனால், அவர்கள் புஷ்பாவுக்கு தொல்லை கொடுப்பதை நிறுத்தவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், புஷ்பா மன உளைச்சலுக்கு ஆளாகி இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு புஷ்பா தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து தூக்க மாத்திரைகளை அதிக அளவில் விழுங்கி மயங்கி கிடந்துள்ளார். இதைப்பார்த்த உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

போலீஸ் விசாரணை

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு கோலார் புறநகர் போலீசார் விரைந்து வந்த விசாரணை நடத்தினர். மேலும், கிராம பஞ்சாயத்து துணைத் தலைவர் நாகேஷ் மற்றும் உறுப்பினர் விஜயகுமார் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story