ஆடி அமாவாசைக்கு தர்ப்பணம் செய்வதற்காக கடற்கரை, நீர் நிலைகளுக்கு செல்ல இன்று தடை
ஆடி அமாவாசயைான இன்று முதியோர்களுக்கு தர்ப்பணம் செய்ய கடற்கரை மற்றும் நீர் நிலைகளுக்கு செல்ல பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.
சென்னை,
தமிழகத்தில் கொரோனா 3-வது அலை நுழைந்துவிடாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முடுக்கி விட்டு உள்ளார். அதன்படி வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அனைத்து வழிப்பாட்டு தலங்களிலும் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு வருகிற 23-ந் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது.
இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஆடி அமாவாசை கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த தினத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வது நடைமுறையில் உள்ளது. ஆனால் கொரோனா பரவலை கருத்தில் கொண்டு ஆடி அமாவாசையையொட்டி பக்தர்கள் கோவிலுக்கு செல்ல அனுமதி இல்லை என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு அறிவித்து உள்ளார்.
இந்தநிலையில் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம் சார்பில் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழக அரசு அறிவித்து உள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பொதுமக்கள் முறையாக கடைப்பிடிக்க வேண்டும். ஆடி அமாவாசையான இன்று கோவில்களுக்கு செல்லவோ, முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதற்காகவோ சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் குறிப்பாக முட்டுக்காடு முதல் திருவான்மியூர், பெசன்ட் நகர், மெரினா, அண்ணா சதுக்கம், திருவொற்றியூர், எண்ணூர் வரையிலான கடற்கரை பகுதிகள், கோவில் குளங்கள் மற்றும் உள்ள நீர் நிலைகளுக்கு பொதுமக்கள் செல்ல வேண்டாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story