ஒரு தலை காதல் பிரச்சினை: ஜவுளி கடை பெண் ஊழியரை கொலை செய்ய முயற்சி வாலிபர் கைது
ஒரு தலை காதல் பிரச்சினையில் ஜவுளி கடை பெண் ஊழியரை கொலை செய்ய முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை,
கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த 21 வயது இளம்பெண், சென்னை தியாகராய நகரில் உள்ள ஒரு ஜவுளிக்கடையில் வேலை பார்த்து வருகிறார். இவர், இரவு பணி முடிந்து உஸ்மான் சாலை வழியாக நடந்து சென்றுகொண்டிருந்தார்.
அப்போது வாலிபர் ஒருவர் திடீரென்று இளம்பெண்ணை வழிமறித்து தகராறில் ஈடுபட்டார். பின்னர் அவரது முகத்தில் பிளேடால் வெட்டினார். அதன்பின்னர் கழுத்தில் வெட்ட முயன்றபோது இளம்பெண் அலறினார். இதையடுத்து அந்த வாலிபர் தப்பி ஓட முயன்றபோது சாலையில் சென்றவர்கள் அவரை மடக்கிப்பிடித்து மாம்பலம் போலீசில் ஒப்படைத்தனர்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் அவர், நெல்லை மாவட்டத்தை சேர்ந்த சங்கர் (30) என்பதும், அந்த பெண் வேலைபார்த்த கடையில் அவரும் பணியாற்றி உள்ளார். அப்போது அவர், அந்த பெண்ணை ஒரு தலையாக காதலித்து வந்துள்ளார்.
ஆனால் அவரது காதலை அந்த பெண் ஏற்காததால் ஆத்திரத்தில் அவரை கொலை செய்ய சங்கர் முயற்சித்தது தெரிய வந்தது. இதையடுத்து மாம்பலம் போலீசார் கொலை முயற்சி வழக்கின் கீழ் சங்கரை கைது செய்தனர்.
Related Tags :
Next Story