போலீஸ்காரர் வீட்டில் இரும்பு கதவை உடைத்து வீசி நகை, பணம் திருட்டு.
ஜோலார்பேட்டை அருகே போலீஸ்காரர் வீட்டின் இரும்பு கதவை உடைத்து நகை, பணத்தை மர்மநபர்கள் திருடிச்சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஜோலார்பேட்டை
போலீஸ்காரர் வீடு
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட பாச்சல் பஞ்சாயத்து பசுமை நகர் பகுதியில் வசித்து வருபவர் ஜலேந்தரன் (வயது41). இவர் சென்னை குரோம்பேட்டை போலீஸ் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி வித்தியா (35), குழந்தைகளுடன் பசுமை நகரில் வசித்து வருகிறார்.
வித்தியாவின் தாயார் வேதேகி ஆத்தூர் தாலுகா பகுதியில் வசித்து வருகிறார்். அவருக்னுகு உடல்நல குறைவு ஏற்பட்டதால் வித்தியா நேற்று முன்தினம் மாலை 6 மணிக்கு வீட்டை பூட்டி விட்டு குழந்தைகளுடன் சென்றார். இரவு அங்கேயே தங்கியுள்ளார்.
கதவை உடைத்து திருட்டு
இந்தநிலையில் பக்கத்து வீட்டில் வசிக்கும் ஓய்வு பெற்ற ராணுவ வீரர் சசிகுமார் நேற்று காலை ஜலந்திரன் வீட்டை பார்த்தபோது வீட்டின் பின்புற இரும்பு கதவு உடைக்கப்பட்டு கிடந்தது. இதுகுறித்து அவர் தேவகிக்கு தகவல் தெரிவித்தார். உடனே தேவகி வந்து பார்த்தபோது வீட்டில் வைத்திருந்த 5 பவுன் நகை மற்றும் ரூ.20 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடிச்சென்றிருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். தகவலின்பேரில் ஜோலார்பேட்டை போலிசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். மேலும் கைரேகை நிபுணர்களை வரவழைத்து கை ரேகைகளை பதிவு செய்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story