ஆட்டோ டிரைவர் வீட்டில் நகை திருட்டு
ஆட்டோ டிரைவர் வீட்டில் நகை திருட்டு
மதுரை
மதுரை ஒத்தக்கடை நரசிங்கம் பகுதியைச் சேர்ந்தவர் கருப்புசாமி ரமேஷ் (வயது48). ஆட்டோ டிரைவரான இவர், தனது குடும்பத்தினருடன் வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பினர். அப்போது வீட்டின் கதவை உடைத்து, பீரோவில் இருந்த 5 பவுன் நகையை அடையாளம் தெரியாத நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து கருப்புசாமி ரமேஷ் அளித்த புகாரின் பேரில் ஒத்தக்கடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். இதற்கிடையே, போலீசார் ஒத்தக்கடை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, அப்பகுதியில் சுற்றித் திரிந்த சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த சாந்தி, ராஜா உள்பட4 பேரை பிடித்து விசாரித்ததில், கருப்புசாமி ரமேஷ் வீட்டில் நடந்த திருட்டில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 4 பேரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story