ஆடி அமாவாசை தடை: கோவில்கள் அடைக்கப்பட்டன- வாசல் முன்பு விளக்கேற்றி வழிபாடு

ஆடி அமாவாசை தடை: கோவில்கள் அடைக்கப்பட்டன- வாசல் முன்பு விளக்கேற்றி வழிபாடு
x
தினத்தந்தி 8 Aug 2021 10:03 PM GMT (Updated: 8 Aug 2021 10:03 PM GMT)

ஆடி அமாவாசையையொட்டி ஈரோட்டில் நேற்று கோவில்கள் அடைக்கப்பட்டு இருந்தன. பக்தர்கள் கோவில் வாசலில் விளக்கு ஏற்றி வழிபாடு செய்தனர்.

ஈரோடு
ஆடி அமாவாசையையொட்டி ஈரோட்டில் நேற்று கோவில்கள் அடைக்கப்பட்டு இருந்தன. பக்தர்கள் கோவில் வாசலில் விளக்கு ஏற்றி வழிபாடு செய்தனர்.
ஆடி அமாவாசை தடை
கொரோனா காரணமாக தமிழ்நாட்டில் புதிய கட்டுப்பாடுகள் இன்று (திங்கட்கிழமை) முதல் அமலுக்கு வருகின்றன. இதுபோல் நேற்று ஆடி அமாவாசையை முன்னிட்டு முக்கிய கோவில்கள் அனைத்தும் அடைக்கப்பட்டு இருந்தன. ஈரோட்டில் பெரிய மாரியம்மன் கோவில், கோட்டை ஈஸ்வரன் கோவில், கோட்டை பெருமாள் கோவில், சூரம்பட்டி மாரியம்மன் கோவில், கருங்கல்பாளையம் சோழீஸ்வரர் கோவில் என்று முக்கிய கோவில்கள் அடைக்கப்பட்டு இருந்தன.
விளக்கேற்றி வழிபாடு
வழக்கமாக ஆடி அமாவாசை தினத்தில் கோவில்களுக்கு சென்று வழிபாடு செய்வதை மன நிறைவாக எண்ணும் பக்தர்கள் பலரும் தடையை மீறியும் கோவில்களுக்கு வந்தனர். கோவில் நடை சாத்தப்பட்டு இருப்பதை கண்டு கோபுர தரிசனம் செய்தும், கோவில் வாசல்களில் விளக்கு ஏற்றியும் வழிபாடு செய்தனர். ஈரோடு பெரிய மாரியம்மன் கோவில் முன்பு இரவு வரை பக்தர்கள் கூடி வந்து விளக்கேற்றி வழிபாடு செய்தனர்.

Next Story