காவிரிக்கரையில் ெபாதுமக்கள் கூட தடை விதிக்கப்பட்டதால் முன்னோர்களுக்கு வீடுகளிலேயே திதி-தர்ப்பணம் செய்து வழிபாடு- காலிங்கராயன் வாய்க்கால் ஓரத்திலும் பலர் சாமி கும்பிட்டனர்

காவிரிக்கரையில் ெபாதுமக்கள் கூட தடை விதிக்கப்பட்டதால் முன்னோர்களுக்கு வீடுகளிலேயே திதி-தர்ப்பணம் செய்து வழிபாடு- காலிங்கராயன் வாய்க்கால் ஓரத்திலும் பலர் சாமி கும்பிட்டனர்
x
தினத்தந்தி 8 Aug 2021 10:09 PM GMT (Updated: 8 Aug 2021 10:09 PM GMT)

ஆடி அமாவாசையை முன்னிட்டு காவிரிக்கரையில் பொதுமக்கள் கூட தடை விதித்ததையொட்டி நேற்று வீடுகளிலேயே முன்னோர்களுக்கு திதி-தர்ப்பணம் செய்தும், காலிங்கராயன் வாய்க்கால் கரையில் படையல் வைத்தும் பொதுமக்கள் சாமி கும்பிட்டனர்.

ஈரோடு

தடை
கொரோனா பரவல் காரணமாக தமிழ்நாட்டில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது. எனவே பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் பலத்த பாதுகாப்பு மற்றும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.
அதன்படி ஈரோடு மாவட்டத்தில் ஆடி அமாவாசையையொட்டி பொதுமக்கள் அதிகம் கூடும் பவானி கூடுதுறை, கொடுமுடி, கருங்கல்பாளையம் காவிரி ஆறு உள்ளிட்ட காவிரிக்கரை மற்றும் பவானி ஆற்றங்கரைகளில் பக்தர்கள் கூடி திதி-தர்ப்பண பூஜைகள் செய்ய தடை விதித்து மாவட்ட கலெக்டர் எச்.கிருஷ்ணனுண்ணி அறிவித்து இருந்தார்.
காலிங்கராயன் வாய்க்கால்
மேலும் தடையை மீறி பொதுமக்கள் யாரும் காவிரிக்கரை பகுதிகளுக்கு செல்லாமல் இருக்க அனைத்து முக்கிய பகுதிகளிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது.
ஈரோடு கருங்கல்பாளையம் காவிரி ஆற்றுக்கு செல்வதற்காக பலரும் நேற்று வந்தனர். அவர்களை போலீசார் தடுத்தனர். அதைத்தொடர்ந்து கருங்கல்பாளையம் காலிங்கராயன் வாய்க்கால் கரையில் உட்கார்ந்து பலரும் திதி-தர்ப்பண பூஜைகள் செய்தும் படையல் வைத்தும் காலிங்கராயன் தண்ணீரிலேயே புனித நீராடினார்கள்.
வீடுகளில் படையல்
திதி-தர்ப்பண பூஜைகள் செய்ய காவிரிக்கரை பகுதிகளில் தடை விதிக்கப்பட்டதால் பொதுமக்கள் ஏராளமானவர்கள் அவரவர் வீடுகளிலேயே முன்னோர்களுக்கு திதி-தர்ப்பணம் செய்தனர்.
இதற்கு வழிகாட்டும் வகையில் வாட்ஸ்அப் மூலம் பலரும் குரல் வடிவம் மற்றும் எழுத்து வடிவ வழிமுறைகளை பகிர்ந்து இருந்தனர். இந்த வழிமுறைகள் தெரியாதவர்கள், வழக்கம்போல முன்னோர்களுக்கு வீடுகளிலேயே படையல் வைத்து வழிபட்டனர். பூஜை முடிவில் காகத்துக்கு உணவு வைத்து முன்னோருக்கு படைத்தனர்.

Next Story