நெல்மூட்டைகளை அடுக்கி வைத்து விற்பனைக்காக காத்திருக்கும் விவசாயிகள்


நெல்மூட்டைகளை அடுக்கி வைத்து விற்பனைக்காக காத்திருக்கும் விவசாயிகள்
x
தினத்தந்தி 9 Aug 2021 8:47 PM IST (Updated: 9 Aug 2021 8:47 PM IST)
t-max-icont-min-icon

அரசு நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படாததால் நெல்மூட்டைகளை அடுக்கி வைத்து விற்பனைக்காக விவசாயிகள் காத்திருக்கின்றனர். இதனால் மழையில் நெல்மூட்டைகள் நனைந்து சேதமடைந்து வருகிறது.

மயிலாடுதுறை:
அரசு நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படாததால் நெல்மூட்டைகளை அடுக்கி வைத்து விற்பனைக்காக விவசாயிகள் காத்திருக்கின்றனர். இதனால் மழையில் நெல்மூட்டைகள் நனைந்து சேதமடைந்து வருகிறது. 
நெல்மூட்டைகளை அடுக்கிவைத்து 
மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறை, குத்தாலம், தரங்கம்பாடி, சீர்காழி ஆகிய 4 தாலுகாக்களில் நிலத்தடிநீர் மற்றும் ஆற்றுப்பாசனம் மூலம் 70 ஆயிரம் ஏக்கருக்கு மேல் விவசாயிகள் குறுவை சாகுபடி செய்துள்ளனர். தற்போது குறுவை அறுவடை செய்யும் பணிகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். ஆண்டுதோறும் குறுவை சாகுபடி நெல்லை கொள்முதல் செய்வதற்காக மயிலாடுதுறை மாவட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படுவது வழக்கம். 
ஆனால் இந்த ஆண்டு கோனேரிராஜபுரம், சிவனாகரம் உள்ளிட்ட 30 கிராமங்களில் மட்டுமே கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் அறுவடை செய்த நெல் மூட்டைகளை மாவட்டத்தில் பல்வேறு அரசு நேரடி கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்வதற்காக கொண்டு சென்று அடுக்கி வைத்து காத்து வருகின்றனர். எனவே உடனடியாக அரசு நேரடி நெல்கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும் என்று  விவசாயிகள் மாவட்ட கலெக்டர் லலிதாவிடம் மனு அளித்துள்ளனர். 
தார்ப்பாய் கொண்டு 
இந்தநிலையில் நேற்றுமுன்தினம் இரவு மயிலாடுதுறை மாவட்டத்தில் பெய்த பலத்த மழையால் நெல்மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடைந்து வருவதாகவும், இதனால் தனியார் வியாபாரிகளிடம் குறைந்த விலைக்கு நெல்லை விற்பனை செய்யவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் விவசாயிகள் வேதனையுடன் கூறினர். மேலும் மழையில் நனையாமல் இருப்பதற்காக விவசாயிகள் நெல்மூட்டைகளை தார்ப்பாய் கொண்டு மூடி வைத்துள்ளனர். எனவே உடனடியாக மாவட்ட நிர்வாகம் அரசு நேரடிகொள்முதல் நிலையத்தை திறக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story