தனியார் நிறுவன ஊழியரிடம் நகை, செல்போன் பறிப்பு


தனியார் நிறுவன ஊழியரிடம் நகை, செல்போன் பறிப்பு
x
தினத்தந்தி 10 Aug 2021 1:23 AM IST (Updated: 10 Aug 2021 1:23 AM IST)
t-max-icont-min-icon

தனியார் நிறுவன ஊழியரிடம் நகை, செல்போன் பறித்த மர்ம கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

மதுரை,ஆக.
மதுரை தல்லாகுளம் தபால் தந்தி நகரைச் சேர்ந்தவர் கண்ணன் (வயது 32). தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர் அந்த பகுதியில் உள்ள தபால் அலுவலகம் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் 3 பேர், கண்ணனை வழிமறித்து அவர் அணிந்திருந்த ஒரு பவுன் நகை மற்றும் விலை உயர்ந்த செல்போன் ஆகியவற்றை பறித்து விட்டு சென்றனர். இது குறித்து கண்ணன் அளித்த புகாரின் பேரில் தல்லாகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இதுபோல் அரசரடி பகுதியைச் சேர்ந்த ரமேஷ்குமார் (29) வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது அங்கு வந்த மர்ம நபர்கள் வீட்டில் இருந்த 3 செல்போன்களை திருடி சென்றனர். இது குறித்த புகாரின் பேரில் எஸ்.எஸ்.காலனி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story