மேலும் 22 பேருக்கு கொரோனா
மேலும் 22 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.
மதுரை,ஆக
மதுரை மாவட்டத்தில் நேற்று மேலும் 22 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. அவர்களில் 13 பேர் நகர் பகுதியை சேர்ந்தவர்கள். இம்மாவட்டத்தில் இதுவரை நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 73 ஆயிரத்து 694 ஆக உயர்ந்துள்ளது. இதுபோல் நேற்று 20 பேர் கொரோனாவில் இருந்து குணம் அடைந்து வீடு திரும்பினர். இவர்களில் 11 பேர் நகர் பகுதியைச் சேர்ந்தவர்கள். நேற்றுடன் மதுரை மாவட்டத்தில் 72 ஆயிரத்து 315 பேர் குணம் அடைந்து வீட்டிற்கு சென்றிருக்கிறார்கள்.
சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 232 ஆக குறைந்துள்ளது. மதுரையில் கொரோனா பாதிப்பால் நேற்று யாரும் உயிரிழக்கவில்லை. உயிரிழப்பு எண்ணிக்கை 1,147 ஆக உள்ளது.
Related Tags :
Next Story