தாளவாடி அருகே தமிழக எல்லையில் கர்நாடக மாநிலத்தில் இருந்து வருபவர்களுக்கு கொரோனா பரிசோதனை


தாளவாடி அருகே தமிழக எல்லையில் கர்நாடக மாநிலத்தில் இருந்து வருபவர்களுக்கு கொரோனா பரிசோதனை
x
தினத்தந்தி 9 Aug 2021 11:30 PM GMT (Updated: 9 Aug 2021 11:30 PM GMT)

தாளவாடி அருகே தமிழக எல்லையில் கர்நாடக மாநிலத்தில் இருந்து வருபவர்களுக்கு கொரோனா பரிசோதனை நடந்து வருகிறது.

தாளவாடி
தாளவாடி அருகே தமிழக எல்லையில் கர்நாடக மாநிலத்தில் இருந்து வருபவர்களுக்கு கொரோனா பரிசோதனை நடந்து வருகிறது.
மாவட்ட நிர்வாகம் உத்தரவு
ஈரோடு மாவட்டத்தில் தினமும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க மாவட்ட நிர்வாகம் புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி நேற்று முதல் பொதுமக்கள் அதிக கூடும் இடங்களான பால், மருந்து கடைகள் தவிர மளிகை, காய்கறி கடைகள், பேக்கரிகள் உள்பட அனைத்து கடைகளும் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழக பகுதியான ஈரோடு மாவட்ட எல்லைக்கு வருபவர்கள் கொரோனா பரிசோதனை சான்றிதழ் கட்டாயம் கொண்டு் வர வேண்டு்ம் என மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி உத்தரவிட்டுள்ளார்.
கொரோனா பரிசோதனை சான்றிதழ்
அதன்படி மாநில எல்லை பகுதியான தாளவாடியை அடுத்த பாரதிபுரம், கும்டாபுரம் உள்ளிட்ட சோதனை சாவடிகளில் மருத்துவ குழு மற்றும் காவல் துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடகாவில் இருந்து தமிழகத்துக்குள் நுழையும் நபர்களிடம் 72 மணி நேரத்துக்குள் எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனை சான்றிதழ் அல்லது 2 தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டதற்கான சான்றிதழ் காட்டினால் மட்டுமே அனுமதி அளிக்கப்படுகிறது. சான்றிதழ்கள் இல்லை என்றால் மருத்துவ குழு மூலம் அங்கேயே கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. 


Next Story