புதுடெல்லி போராட்டத்தில் எம்.பி.க்களுடன் ஈரோடு விவசாயிகள் பங்கேற்பு
புதுடெல்லியில் போராடி வரும் விவசாயிகள் போராட்டத்தில் ஈரோடு விவசாயிகள், எம்.பி.க்களுடன் கலந்து கொண்டனர்.
ஈரோடு
புதுடெல்லியில் போராடி வரும் விவசாயிகள் போராட்டத்தில் ஈரோடு விவசாயிகள், எம்.பி.க்களுடன் கலந்து கொண்டனர்.
விவசாயிகள் போராட்டம்
புதுடெல்லி சிங்கு எல்லையில் விவசாயிகள் போராட்டம் நடந்து வருகிறது. மத்திய பா.ஜனதா அரசு கொண்டு வந்து உள்ள 3 வேளாண் சட்டங்களையும் திரும்ப பெறக்கோரி இந்த தொடர் போராட்டம் நடந்து வருகிறது. நாடு முழுவதும் பல்வேறு அமைப்புகளும், விவசாயிகள் சங்கத்தினரும் இந்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.
முடிவின்றி தொடரும் இந்த விவசாயிகள் போராட்டத்தில் ஈரோடு மாவட்டத்தில் இருந்து தற்சார்பு விவசாயிகள் சங்க தலைவர் கி.வே.பொன்னையன் தலைமையில் விவசாயிகள் பங்கேற்று உள்ளனர். இந்த போராட்டத்தில் ஈரோடு மாவட்டம் சார்பில் விவசாயி என்ற முறையில் அ.கணேசமூர்த்தி எம்.பி, நாமக்கல் எம்.பி. சின்ராசு ஆகியோரும் பங்கேற்று உள்ளனர்.
ஆதரவு
அங்கு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் சங்க தலைவர்களை எம்.பி.க்கள் தலைமையில் விவசாயிகள் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். பின்னர் விவசாயிகள் மத்தியில் கணேசமூர்த்தி எம்.பி. பேசினார். அப்போது, நான் ஒரு உழவன் என்ற முறையில் இந்த போராட்டத்தில் பங்கேற்று இருக்கிறேன். ஒரு எம்.பி. என்ற முறையில் நாடாளுமன்றத்தில் விவசாயிகள் கோரிக்கைக்காக குரல் கொடுப்பேன். தமிழ்நாட்டின் எம்.பி.க்கள் அனைவரும் விவசாயிகளுக்கு ஆதரவாக இருப்பார்கள் என்று பேசினார்.
இதுபோல் ஈரோடு மாவட்ட விவசாயிகளும் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து பேசினார்கள்.
Related Tags :
Next Story