பல்வேறு இடங்களில் வேளாண் சட்டங்களை கண்டித்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


பல்வேறு இடங்களில் வேளாண் சட்டங்களை கண்டித்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 10 Aug 2021 5:00 AM IST (Updated: 10 Aug 2021 5:00 AM IST)
t-max-icont-min-icon

மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் வேளாண் சட்டங்களை கண்டித்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஈரோடு
மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் வேளாண் சட்டங்களை கண்டித்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோபி
மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்கள் மற்றும் மின்சார திருத்த மசோதா 2020, தொழிலாளர் உரிமையைப் பறிக்கும் சட்ட தொகுப்புகளை திரும்ப பெற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், கண்டித்தும் நேற்று நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடந்தது. அதன்படி தமிழகத்திலும் நடத்தப்பட்டது.
ஈரோடு மாவட்டத்தில் கோபி பஸ் நிலையத்தில் தொழிற்சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு வி.ஆர்.மாணிக்கம் தலைமை தாங்கினார். இதில் தொழிற்சங்க நிர்வாகிகள் வேலுச்சாமி, முத்துசாமி, ராஜன், மாரிமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர்.
நம்பியூர்
இதேபோல் நம்பியூர் வட்டார இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நம்பியூர் பஸ் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு கட்சி உறுப்பினர் கணேசன் தலைமை தாங்கினார். ரங்கசாமி, வெள்ளியங்கிரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்
சி.ஐ.டி.யு. மாவட்ட குழு உறுப்பினர் ஆர்.ரங்கசாமி சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். ஆர்ப்பாட்டத்தில் கட்சி நிர்வாகிகள், விவசாய சங்க நிர்வாகிகள், டாஸ்மாக் சங்க ஊழியர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
அந்தியூர்
அந்தியூர் தாலுகா அலுவலகம் முன்பு சி.ஐ.டி.யு. விவசாயிகள் சங்கம் மற்றும் விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் வேளாண் சட்டங்களை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின் தாலுகா செயலாளர் மாரிமுத்து தலைமை தாங்கினார். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
கடம்பூர்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி இந்திய தொழிற்சங்க மையம், தமிழ்நாடு விவசாய சங்கம் மற்றும் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மலை வட்டார செயலாளர் துரைசாமி தலைமை தாங்கினார். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Next Story