லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதல்


லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதல்
x
தினத்தந்தி 11 Aug 2021 12:31 AM IST (Updated: 11 Aug 2021 12:31 AM IST)
t-max-icont-min-icon

லாரி மீது மோட்டார் மோதிய விபத்தில் கிராம நிர்வாக அலுவலர் உயிர் தப்பினார்.

திருப்பத்தூர்,

திருப்பத்தூர்- திண்டுக்கல் இடையே சாலை விரிவுபடுத்தும் பணி நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்த நிலையில் நேற்று காலை சாலையில் டேங்கர் லாரி மூலம் தண்ணீர் விடப்பட்டு கொண்டிருந்தது. அப்போது பிரான்மலையில் இருந்து திருப்பத்தூர் நோக்கி வந்து கொண்டிருந்த கோட்டையிருப்பு கிராம நிர்வாக அலுவலர் பாலமுருகன் என்பவர் தண்ணீர் லாரி பின்புறமாக வருவது தெரியாமல் அதன் மீது மோட்டார் சைக்கிளோடு மோதினார். இதில் கீழே விழுந்த அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.



Next Story