பழுப்பு நிறத்தில் அரிசி வினியோகிப்பதாக கூறி ரேஷன் கடையை பொதுமக்கள் முற்றுைக- பவானியில் பரபரப்பு
பவானி அருகே பழுப்பு நிறத்தில் அரிசி வினியோகிப்பதாக கூறி செய்யப்பட்டதால் ரேஷன் கடையை பொதுமக்கள் முற்றுகையிட்டார்கள்.
பவானி
பவானி அருகே பழுப்பு நிறத்தில் அரிசி வினியோகிப்பதாக கூறி செய்யப்பட்டதால் ரேஷன் கடையை பொதுமக்கள் முற்றுகையிட்டார்கள்.
பழுப்பு அரிசி
பவானி பழனிபுரத்தில் உள்ள ரேஷன் கடையில் நேற்று பொதுமக்களுக்கு அரிசி வினியோகிக்கப்பட்டது. இதில் கருப்பு அரிசி அதிக அளவில் கலந்து பழுப்பு நிறமாக இருந்தது. இதனால் பொதுமக்கள் ரேஷன் கடையை முற்றுகையிட்டனர்.
இதுபற்றி தகவல் கிடைத்ததும், பவானி போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் பவானி வட்ட வழங்கல் அதிகாரி ராவுத்தர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று முற்றுைக போராட்டத்தில் ஈடுபட்டு இருந்தவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
பேச்சுவார்த்தை
அப்போது பொதுமக்கள் அதிகாரிகளிடம், தரம் இல்லாத பழுப்பு நிறத்தில் ரேஷன் அரிசி உள்ளது. இதை எப்படி சாப்பிட முடியும். எந்த பொருள் கேட்டாலும் இல்லை என்கிறார்கள். ஆனால் மாலை நேரங்களில் ஒரு சிலருக்கு வினியோகம் செய்கிறார்கள் என்று புகார் அளித்தார்கள்.
அதற்கு அதிகாரிகள் பழுப்பு அரிசிக்கு பதிலாக நாளை நல்ல அரிசி உங்களுக்கு வழங்கப்படும் என்றார்கள். அதற்கு பொதுமக்கள் அப்படி என்றால் நல்ல அரிசி இருக்கும்போது ஏன் பழுப்பு அரிசி வழங்குகிறீர்கள் என்று கேட்டார்கள். இதையடுத்து அதிகாரிகள் உங்கள் கோரிக்கைகளுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கிறோம் என்றார்கள். பின்னர் அதை ஏற்றுக்கொண்டு பொதுமக்கள் கலைந்து சென்றார்கள்.
Related Tags :
Next Story