பள்ளி செல்லா இடைநின்ற குழந்தைகள் கணக்கெடுப்பு பணி
காஞ்சீபுரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஆறுமுகம் உத்தரவின்படி ஸ்ரீபெரும்புதூர் மாவட்ட கல்வி அலுவலர் ராதாகிருஷ்ணன் தலைமையில் கணக்கெடுக்கும் பணி தொடங்கி வைக்கப்பட்டது.
படப்பை,
காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியத்தில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி வட்டார வள மையம் சார்பில் 6 வயது முதல் 19 வயது வரை பள்ளி செல்லா இடைநின்ற குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளை கண்டறிவதற்கான கணக்கெடுப்பு பணி வருகிற 31-ந்தேதி வரை கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி மேற்கொள்ளப்படுகிறது.
நேற்று படப்பை அருகே உள்ள நாவலூர் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதியில் காஞ்சீபுரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஆறுமுகம் உத்தரவின்படி ஸ்ரீபெரும்புதூர் மாவட்ட கல்வி அலுவலர் ராதாகிருஷ்ணன் தலைமையில் கணக்கெடுக்கும் பணி தொடங்கி வைக்கப்பட்டது. மாவட்ட உதவி திட்ட அலுவலர் பிரபாகரன் முன்னிலை வகித்தார். இதில் வட்டார வள மைய மேற்பார்வையாளர் உமாபதி, தலைமை ஆசிரியர் பிரிட்டோ மனோகர் ஆகியோர் உடனிருந்தனர். முன்னதாக கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு மாணவர்களை பள்ளியில் சேர்ப்பதன் அவசியம் குறித்து பெற்றோர்களிடமும் மாணவர்களிடமும் துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
Related Tags :
Next Story