ஆசனூர் அருகே பரபரப்பு காரில் வந்தவர்களை துரத்திய ஒற்றை யானை


ஆசனூர் அருகே பரபரப்பு காரில் வந்தவர்களை துரத்திய ஒற்றை யானை
x
தினத்தந்தி 12 Aug 2021 2:40 AM IST (Updated: 12 Aug 2021 2:40 AM IST)
t-max-icont-min-icon

ஆசனூர் அருகே காரில் வந்தவர்களை ஒற்றை யானை துரத்தியது.

தாளவாடி
ஆசனூர் அருகே காரில் வந்தவர்களை ஒற்றை யானை துரத்தியது. 
யானைகள்
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகங்களில் யானை, சிறுத்தை, புலி, கரடி, செந்நாய், மான் போன்ற வனவிலங்குகள் வசித்து வருகின்றன. 
இந்த வனத்தில்தான் திண்டுக்கல்லில் இருந்து பெங்களூரு செல்லும் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. இச்சாலையில் எப்போதும் வாகன போக்குவரத்து இருந்து         கொண்டே இருக்கும். தேசிய நெடுஞ்சாலையை யானைகள் குட்டிகளுடன் அவ்வப்போது கடந்து செல்வது வழக்கம்.
துரத்தியது
இந்த நிலையில் நேற்று மதியம் திம்பத்தில் இருந்து ஆசனூர் செல்லும் வழியில் வனப்பகுதியில் இருந்து வெளியே வந்த ஒற்றை யானை, ஆக்ரோஷத்துடன் சுற்றித்திரிந்தது.
அப்போது அந்த வழியாக காரில் வந்தவர்களை யானை துரத்தியது. டிரைவர் வேகமாக காரை இயக்கி சென்றுவிட்டார்.
 இதனால்      பின்னால் வந்தவர்கள்      தங்கள் வாகனங்களை சற்று தூரத்திலேயே நிறுத்திக்கொண்டார்கள். 
பீதி...
நெடுஞ்சாலையை விட்டு சுமார் 30 நிமிடம் யானை செல்லவில்லை. அதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அதன்பின்னர் யானை காட்டுக்குள் சென்றுவிட்டது.  அடிக்கடி ஆசனூர் தேசிய நெடுஞ்சாலையில் யானைகள் வாகனங்களை துரத்துவதால் அந்த வழியாக செல்பவர்கள் பீதியில் உள்ளார்கள்.

Next Story