பெண்களைப்போல் இலவச பஸ் பயணம் கேட்டு கோபி பஸ்நிலையத்தில் குடிபோதையில் 2 பேர் ரகளையில் ஈடுபட்டதால் பரபரப்பு
பெண்களைப்போல் இலவச பஸ் பயணம் கேட்டு கோபி பஸ் நிலையத்தில் குடிபோதையில் 2 பேர் ரகளையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கடத்தூர்
பெண்களைப்போல் இலவச பஸ் பயணம் கேட்டு கோபி பஸ் நிலையத்தில் குடிபோதையில் 2 பேர் ரகளையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
குடிபோதையில் 2 பேர்
கோபி பஸ் நிலையத்தில் இருந்து நேற்று மாலை 4.30 மணி அளவில் அரசு பஸ் ஒன்று பயணிகளை ஏற்றிக்கொண்டு சத்தியமங்கலத்துக்கு புறப்பட்டு சென்று கொண்டிருந்தது.
பஸ் நிலையத்தில் இருந்து புறப்பட்டு சிறிது தூரம் வந்தபோது 45, 48 வயது மதிக்கத்தக்க 2 பேர் அங்கு வந்தனர். அவர்கள் குடிபோதையில் இருந்தனர். அப்போது திடீரென பஸ்சை மறித்தனர். பஸ்சில் ஏற வந்த பயணிகள் என நினைத்து டிைரவர் பஸ்சை நிறுத்தினார்.
அவர்களில் ஒருவர் திடீெரன பஸ் முன்பு படுத்து உருண்டார். மற்றொருவரிடம் கண்டக்டர் ஏன் பஸ்சை வழிமறித்தீர்கள் என்று கேட்டுள்ளார். அதற்கு அவர், ‘அரசு பஸ்சில் பெண்களுக்கு மட்டும் இலவச பயணம் அளிக்கப்படுகிறது. தங்களால் கோபி பஸ் நிலையத்தில் இருந்து நஞ்சகவுண்டன்பாளையத்தில் உள்ள மதுக்கடைக்கு நடந்து செல்ல முடியவில்லை. எனவே அரசுக்கு வருமானம் தரும் தங்களுக்கும் பஸ்சில் இலவசமாக பயணம் செய்ய அனுமதிக்க வேண்டும்’ என்றார்.
பரபரப்பு
இதைப்பார்த்ததும் அங்கு நின்றிருந்தவர்கள் ரகளையில் ஈடுபட்ட 2 பேரையும் சமாதானப்படுத்தி அங்கிருந்து அழைத்து செல்ல முயற்சித்தனர். அப்போது கண்டக்டர் குடிபோதையில் இருந்தவர்களிடம், இதுபற்றி நேரங்காப்பாளரிடம் விசாரித்து கொள்ளுங்கள் என்று கூறினார். அதைத்தொடர்ந்து டிரைவர் பஸ்சை பின்னோக்கி இயக்கி வேகமாக அங்கிருந்து ஓட்டிச்சென்றார்.
இந்த காட்சியை அங்கிருந்தவர்கள் தங்கள் செல்போன்களில் வீடியோ எடுத்தனர். இது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பெண்களை போல் இலவச பஸ் பயணம் கேட்டு கோபி பஸ் நிலையத்தில் குடிமகன்கள் 2 பேர் ரகளையில் ஈடுபட்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story