கர்நாடகாவில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.5 லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்கள் அழிப்பு


கர்நாடகாவில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.5 லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்கள் அழிப்பு
x
தினத்தந்தி 12 Aug 2021 3:07 AM IST (Updated: 12 Aug 2021 3:07 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடகாவில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.5 லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்கள் அழிக்கப்பட்டன.

அந்தியூர்
கர்நாடகாவில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.5 லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்கள் அழிக்கப்பட்டன. 
கர்நாடக மதுபாட்டில்கள்
கொரோனா ஊரடங்கின்போது மதுக்கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. அப்போது கர்நாடகா மாநிலத்தில் இருந்து திருட்டுத்தனமாக மதுபாட்டில்கள் கடத்தப்பட்டன. அதனால் போலீசார் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தி சட்ட விரோதமாக கடத்தி வரப்பட்ட மதுபாட்டில்களை பறிமுதல் செய்தார்கள். அதன்படி பர்கூர் போலீசார் 1,721 மது பாட்டில்களும், அந்தியூர் போலீசார் 138 மதுபாட்டில்களும், வெள்ளித் திருப்பூர் போலீசார் 558 மதுபாட்டில்களும், அம்மாபேட்டை போலீசார் 1,026 மதுபாட்டில்களும் என  மொத்தம் 3 ஆயிரத்து 443 கர்நாடக மாநில மது பாட்டில்கள் மற்றும் பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தார்கள்.
அழிப்பு
இவ்வாறு பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்கள் அனைத்தும் நேற்று அந்தியூர் பெரிய ஏரிக்கு லாரியில் கொண்டுவரப்பட்டன.
அதைத்தொடர்ந்து கோபி கலால் தாசில்தார் ஷீலா முன்னிலையில், அந்தியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில் தலைமையில் பொக்லைன் எந்திரம் ஏற்றி மதுபாட்டில்கள் அழித்து உடைக்கப்பட்டன. சுமார் ரூ.5 லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்கள் அழிக்கப்பட்டதாக போலீசார் கூறினார்கள். 
 மதுபாட்டில் அழிக்கப்பட்டபோது அப்பகுதி மக்கள் திரண்டு வந்து வேடிக்கை பார்த்தார்கள்.

Next Story