வால்பாறை மலைப்பாதையில் விபத்தை தடுக்க டிஜிட்டல் அறிவிப்பு பலகை


வால்பாறை மலைப்பாதையில் விபத்தை தடுக்க டிஜிட்டல் அறிவிப்பு பலகை
x
தினத்தந்தி 12 Aug 2021 11:15 PM IST (Updated: 12 Aug 2021 11:15 PM IST)
t-max-icont-min-icon

வால்பாறை மலைப்பாதையில் விபத்தை தடுக்க டிஜிட்டல் முறையில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டு உள்ளது.

பொள்ளாச்சி

வால்பாறை மலைப்பாதையில் விபத்தை தடுக்க டிஜிட்டல் முறையில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டு உள்ளது.

டிஜிட்டல் அறிவிப்பு பலகை

பொள்ளாச்சி-வால்பாறை ரோட்டில் ஆழியாறில் இருந்து மலைப்பாதை தொடங்குகிறது. 40 கொண்டை ஊசி வளைவு களை கொண்ட மலைப்பாதையில் அடிக்கடி வாகனங்கள் விபத்தில் சிக்கி கொள்கின்றன. 

 குறுகிய வளைவுகள் உள்ளதால் எதிரே வரும் வாகனங்கள் எளிதில் தெரிவதில்லை. இந்த நிலையில் விபத்துகளை தடுக்க நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி டிஜிட்டல் முறையில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டு உள்ளது.

தமிழில் அறிவிப்பு 

வால்பாறை மலைப்பாதையில் சோலார் வசதியுடன் கூடிய டிஜிட்டல் பலகையில் வாகனங்கள் வரும் போது தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் அறிவிப்பு வெளியாகிறது. இதை பார்த்து வாகனங் களை வாகன ஓட்டிகள் கவனமாக இயக்கி வருகின்றனர். 

இதை தவிர அதிகமாக பனி படரும் கவர்க்கல் பகுதியில் நவீன விளக்குகள் வைக்கப்பட்டு உள்ளன. இதுகுறித்து நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் கூறியதாவது:-

வால்பாறை மலைப்பாதையில் விபத்துகளை தடுக்கும் வகையில் 5-வது கொண்டை ஊசி வளைவு மற்றும் கவர்க்கல் பகுதியில் சோலார் வசதியுடன் கூடிய டிஜிட்டல் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டு உள்ளது. 

விபத்துகள் குறையும் 

வழக்கமாக குறைந்த திறன் கொண்ட சோலார் பேனல் தான் பயன்படுத்துவார்கள். ஆனால் மலைப்பாதையில் அதிக திறன் கொண்ட சோலார் பேனல் வைக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக வெயில் மட்டுமல்லாது மழைக்காலங்களிலும் இந்த சோலார் இயங்கும்.

வளைவு பகுதியில் எதிரே வரும் வாகனங்கள் தெரியும் வகையில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுத்துக்கள் அந்த பலகையில் வரும். வளைவின் கீழ் பகுதி மற்றும் மேல் பகுதியில் என 4 இடங்களில் வைக்கப்பட்டு உள்ளது. 

இந்த சென்சாரை வாகனங்கள் கடந்து சென்றதும் அறிவிப்பு வெளியாகும். இதனால் கீழே இருந்து வரும் வாகனங்களுக்கு மேல் இருந்து வரும் வாகன ஓட்டிகள் வழிவிடுவதுடன் விபத்துகள் குறையும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story