புஞ்சைபுளியம்பட்டியில் வியாபாரிகள் வருகை குறைந்ததால் வெறிச்சோடிய வாரச்சந்தை
புஞ்சைபுளியம்பட்டியில் வியாபாரிகள் வருகை குறைந்ததால் வாரச்சந்தை வெறிச்சோடியது.
புஞ்சைபுளியம்பட்டி
புஞ்சைபுளியம்பட்டியில் வியாபாரிகள் வருகை குறைந்ததால் வாரச்சந்தை வெறிச்சோடியது.
வெறிச்சோடிய வாரச்சந்தை
புஞ்சைபுளியம்பட்டியில் வாரந்தோறும் வியாழக்கிழமை வாரச்சந்தை நடைபெறும். அதன்படி நேற்று வழக்கம்போல் வாரச்சந்தை கூடியது. ஆனால் கொரோனா தொற்று காரணமாக மாலை 5 மணி வரை மட்டுமே கடைகள் திறக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளதால் குறைந்த அளவே வியாபாரிகள் கடை வைத்து இருந்தனர் .
இதனால் பொதுமக்கள் வருகையும் குறைவாகவே இருந்தது. இதன் காரணமாக புஞ்சைபுளியம்பட்டி வாரச்சந்தை வெறிச்சோடி காணப்பட்டது.
கொரோனா விழிப்புணர்வு
நகராட்சி சார்பில் ஒலிபெருக்கி மூலம் பொதுமக்கள் அனைவரையும் முக கவசம் அணியவும், சமூக இடைவெளியை கடைபிடிக்கவும் கூறி கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும் மாட்டுச்சந்தையிலும் கால்நடைகள் வரத்து குறைவாகவே காணப்பட்டது. இதனால் வாரச்சந்தை களை இழந்தது.
Related Tags :
Next Story