ஆப்பக்கூடலில் கர்நாடக மாநிலத்தில் இருந்து கடத்திவரப்பட்ட மதுபாட்டில்கள் அழிப்பு
ஆப்பக்கூடலில் கர்நாடக மாநிலத்தில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.2 லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்கள் அழிக்கப்பட்டன.
அந்தியூர்
ஆப்பக்கூடலில் கர்நாடக மாநிலத்தில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.2 லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்கள் அழிக்கப்பட்டன.
கர்நாடக மதுபாட்டில்கள்
கொரோனா முழு ஊரடங்கின்போது தமிழகத்தில் மதுக்கடைகள் மூடப்பட்டிருந்தன. இதனால் அதிக விலைக்கு விற்பதற்காக கர்நாடக மாநிலத்தில் இருந்து மது பாட்டில்கள் ஈரோடு மாவட்டத்துக்கு வாகனங்கள் மூலம் கடத்தி வரப்பட்டன.
இவ்வாறு கடத்தி வரப்பட்ட கர்நாடக மது பாட்டில்களை ஆப்பக்கூடல் போலீசார் பறிமுதல் செய்தனர். மொத்தம் 865 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த பாட்டில்கள் ஆப்பக்கூடல் போலீஸ் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்தன.
அழிப்பு
இதைத்தொடர்ந்து இந்த மதுபாட்டில்களை அழிக்க முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து நேற்று மதுபாட்டில்கள் போலீஸ் நிலையம் அருகே உள்ள ஏரிக்கரை பகுதிக்கு கொண்டு வரப்பட்டன. அங்கு கோபி கோட்ட கலால் தாசில்தார் ஷீலா தலைமையில் பவானி இன்ஸ்பெக்டர் கண்ணன், ஆப்பக்கூடல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் மற்றும் போலீசார் முன்னிலையில் 865 மது பாட்டில்கள் பொக்லைன் எந்திரம் மூலம் உடைத்து அழிக்கப்பட்டன. பின்னர் குழி தோண்டி புதைக்கப்பட்டன. இதன் மதிப்பு சுமார் ரூ.2 லட்சம் இருக்கும் என போலீசார் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story