60 வயதுக்கு மேற்பட்டவர்களை அரசு வக்கீலாக நியமிக்க தடை கோரி வழக்கு


60 வயதுக்கு மேற்பட்டவர்களை அரசு வக்கீலாக நியமிக்க தடை கோரி வழக்கு
x
தினத்தந்தி 14 Aug 2021 3:14 AM IST (Updated: 14 Aug 2021 3:14 AM IST)
t-max-icont-min-icon

60 வயதுக்கு மேற்பட்டவர்களை அரசு வக்கீலாக நியமிக்க தடை கோரிய வழக்கில் தமிழக அரசு பதில் அளிக்க மதுரை ஐகோர்ட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.60 வயதுக்கு மேற்பட்டவர்களை அரசு வக்கீலாக நியமிக்க தடை கோரிய வழக்கில் தமிழக அரசு பதில் அளிக்க மதுரை ஐகோர்ட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

மதுரை,

60 வயதுக்கு மேற்பட்டவர்களை அரசு வக்கீலாக நியமிக்க தடை கோரிய வழக்கில் தமிழக அரசு பதில் அளிக்க மதுரை ஐகோர்ட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

கவர்னர் ஒப்புதல் இன்றி...

மதுரை நாகமலைபுதுக்கோட்டையை சேர்ந்த சரவணன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
மாவட்ட கோர்ட்டுகளில் அரசு வக்கீல் நியமனம் குறித்த விதிகள் கடந்த 1961-ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டு, அவை தமிழக கவர்னரின் ஒப்புதலுடன் அமல்படுத்தப்பட்டன. அந்த விதிகள் தற்போது வரை பின்பற்றப்பட்டு வருகின்றன. அந்த விதிகளின்படி அரசு வக்கீல்களுக்கு 60 வயதாகி விட்டால் அவர்கள் பதவிக்காலம் தானாக முடிவுக்கு வந்துவிடும்.
இந்த நிலையில் கவர்னரின் ஒப்புதல் இன்றி, சமீபத்தில் தமிழக அரசின் உள்துறை கூடுதல் தலைமை செயலாளர் ஒரு கடிதத்தை தயாரித்து வெளியிட்டுள்ளார்.
சட்ட விதிகளுக்கு புறம்பானது
அதாவது, 60 வயது மற்றும் அதற்கு மேல் உள்ளவர்கள் அரசு வக்கீல்களாக பணியாற்றுவதற்கு தளர்வு வழங்கியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே அரசு வக்கீல் பதவிகளுக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டுவிட்டன. தற்போது இந்த கடிதம் வெளியிடப்பட்டதற்கான காரணம், சில அரசியல்கட்சி சார்ந்தவர்கள் அரசு வக்கீல் பதவிக்கு விண்ணப்பித்தவர்களில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களாக இருக்கின்றனர். அவர்களுக்கு அரசு வக்கீல் பதவியை அளிக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இது சட்ட விதிகளுக்கு புறம்பானது. மேலும் கவர்னர் ஒப்புதலின்றி கடிதம் வெளியிட்டு உள்ளது அந்த பதவியை தவறாக பயன்படுத்தியதாகும்.
எனவே இந்த கடிதத்தின் அடிப்படையில் அரசு வக்கீல் நியமனத்துக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும். அனைத்து தரப்பு வக்கீல்களுக்கும் சம உரிமை வழங்கி, அரசு வக்கீல் நியமனத்தை நடத்த உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார்.

தமிழக அரசுக்கு நோட்டீஸ்

இந்த வழக்கு நீதிபதிகள் துரைசாமி, முரளிசங்கர் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.
மனுதாரர் சார்பில் வக்கீல் ஏ.கண்ணன் ஆஜராகி, அரசு வக்கீல் நியமனத்தில் அரசியல்வாதிகள் தலையீடு உள்ளது. இதனால் தகுதியானவர்கள் புறக்கணிக்கப்படுகின்றனர் என்று வாதாடினார்.
அப்போது இந்த வழக்கு குறித்து தமிழக அரசு பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்பும்படி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Next Story