தாளவாடி அருகே வாழைத்தோட்டத்தில் புகுந்து யானை அட்டகாசம்- 200 வாழைகள் நாசம்


தாளவாடி அருகே வாழைத்தோட்டத்தில் புகுந்து யானை அட்டகாசம்- 200 வாழைகள் நாசம்
x
தினத்தந்தி 14 Aug 2021 3:47 AM IST (Updated: 14 Aug 2021 3:47 AM IST)
t-max-icont-min-icon

தாளவாடி அருகே வாழைத்தோட்டத்தில் புகுந்து யானை அட்டகாசம் செய்ததில் 200 வாழைகள் நாசமடைந்தன.

தாளவாடி
தாளவாடி அருகே வாழைத்தோட்டத்தில் புகுந்து யானை அட்டகாசம் செய்ததில் 200 வாழைகள் நாசமடைந்தன. 
யானைகள்
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகத்தில் ஏராளமான யானைகள் வசித்து வருகின்றன. இந்த யானைகள் அடிக்கடி விவசாய தோட்டத்தில் புகுந்து பயிர்களை நாசம் செய்வது தொடர்கதையாகி வருகிறது. இந்நிலையில் ஜீர்கள்ளி வனச்சரகத்திக்கு உட்பட்ட திகனாரை ஜோரகாடு பகுதியை சேர்ந்தவர் கண்ணன் (வயது 58).
 இவர் தன்னுடைய 2 ஏக்கர் தோட்டத்தில் நேந்திரம் வாழை சாகுபடி செய்துள்ளார். இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு வனப்பகுதியில் இருந்து வந்த காட்டு யானைகள் தோட்டத்துக்குள் புகுந்து வாழை பயிரை தின்றும், குருத்துகளை மிதித்தும் நாசப்படுத்திவிட்டு சென்றுவிட்டது. 
வாழைகள் நாசம்
நேற்று காலை தோட்டத்துக்கு சென்ற கண்ணன் வாழைகள் நாசமாகி கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி உடனே வனத்துறைக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் அங்கு வந்த வனத்துறையினர் சேதமாகி கிடந்த வாழைகளை ஆய்வு செய்தனர். இதுபற்றி கண்ணன் கூறும்போது, ‘அனைத்து வாழைகளும் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்தது. சுமார் 200 வாழைகள் நாசமாகிவிட்டது. என்னைப்போல் நாள்தோறும் விவசாயிகள் பாதிக்கப்படுகிறார்கள். அதனால் யானைகள் வெளியேறாத வகையில், குறிப்பிட்ட இடங்களில் அகழி அமைக்க வேண்டும்’ என்றார். 

Next Story