ஸ்ரீபெரும்புதூர் சுங்கச்சாவடி அருகே வாகனம் மோதி வியாபாரி பலி


ஸ்ரீபெரும்புதூர் சுங்கச்சாவடி அருகே வாகனம் மோதி வியாபாரி பலி
x
தினத்தந்தி 14 Aug 2021 2:05 PM IST (Updated: 14 Aug 2021 2:05 PM IST)
t-max-icont-min-icon

ஸ்ரீபெரும்புதூர் சுங்கச்சாவடி அருகே வாகனம் மோதி வியாபாரி பலியானார்.

ஸ்ரீபெரும்புதூர், 

காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் ஆழ்வார் திருநகர் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 31). இவர் ஸ்ரீபெரும்புதூர் சுங்கச்சாவடி அருகே வேர்க்கடலை வியாபாரம் செய்து வந்தார். நேற்று ஸ்ரீபெரும்புதூர் சுங்கசாவடி அருகே மணிகண்டன் நின்று கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத வாகனம் மணிகண்டன் மீது மோதி நிற்காமல் சென்றது.

இதில் பலத்த காயம் அடைந்த மணிகண்டன் சம்பவ இடத்திலேயே பாலியனார். இதுகுறித்து தகவல் அறிந்த ஸ்ரீபெரும்புதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மணிகண்டனின் உடலை கைப்பற்றி பிரேத பிரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

Next Story