மாவட்டத்தில் 218 இடங்களில் 22,560 பேருக்கு கோவிஷீல்டு தடுப்பூசி
ஈரோடு மாவட்டத்தில் 218 இடங்களில் 22 ஆயிரத்து 560 பேருக்கு கோவிஷீல்டு தடுப்பூசி போடப்பட்டது.
ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் 218 இடங்களில் 22 ஆயிரத்து 560 பேருக்கு கோவிஷீல்டு தடுப்பூசி போடப்பட்டது.
கொரோனா தடுப்பூசி
ஈரோடு மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.
தற்போது மாவட்டத்தில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளதால், தடுப்பு பணியில் மாவட்ட நிர்வாகம் தீவிரம் காட்டி உள்ளது.
மேலும் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவரும் கண்டிப்பாக கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்றும் அரசு தரப்பில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. ஆரம்ப காலத்தில் டாக்டர்கள், செவிலியர்கள், போலீசார்கள் என முன் களப் பணியாளர்களுக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பு ஊசி போடப்பட்டு வருகிறது.
கோவிஷீல்டு
தற்போது வாக்காளர் பட்டியல் அடிப்படையில் அந்தந்த தேர்தல் நிலைய அலுவலர்கள் மூலம் வீடுகளில் டோக்கன் வழங்கப்பட்டு பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஈரோடு மாவட்டத்தில் சிவகிரி, மொடக்குறிச்சி, சென்னிமலை, ஈரோடு, தாளவாடி, சித்தோடு, திங்களூர், நம்பியூர், டி.என் பாளையம், புஞ்சைபுளியம்பட்டி, அத்தாணி, மொடக்குறிச்சி, கோபி, அந்தியூர் ஆகிய பகுதிகளில் மொத்தம் 218 இடங்களில் 22 ஆயிரத்து 560 பேருக்கு கோவிஷீல்டு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டது.
ஈரோடு மாநகராட்சி பகுதிகளில் 25 இடங்களில் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. மக்கள் ஆர்வத்துடன் வந்து, சமூக இடைவெளியை கடைபிடித்து வரிசையில் நின்று தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.
Related Tags :
Next Story