பூதப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ரூ.1½ கோடிக்கு பருத்தி விற்பனை- விலை அதிகரிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி
பூதப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ரூ.1½ கோடிக்கு பருத்தி விற்பனையானது. விலை அதிகரித்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தார்கள்.
அம்மாபேட்டை
பூதப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ரூ.1½ கோடிக்கு பருத்தி விற்பனையானது. விலை அதிகரித்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தார்கள்.
பருத்தி
அம்மாபேட்டை அருகே உள்ள பூதப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் பருத்தி ஏலம் நடைபெற்றது. கர்நாடக மாநிலம் மற்றும் சேலம் மாவட்டம் கொங்கணாபுரம், கொளத்தூர், எடப்பாடி, தேவூர், அந்தியூர், பவானி, அம்மாபேட்டை ஆகிய சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து விவசாயிகள் பருத்தியை ஏலத்துக்கு கொண்டு வந்திருந்தார்கள்.
மொத்தம் 5 ஆயிரத்து 943 மூட்டை பருத்தி விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் சந்திரசேகரன் முன்னிலையில் ஏலம் நடைபெற்றது.
விலை அதிகரிப்பு
இந்த ஏலத்தில் பி.டி. ரக பருத்தி குவிண்டால் குறைந்தபட்ச விலையாக ரூ.7,389-க்கும், அதிக பட்ச விலையாக ரூ.8,890-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.1 கோடியே 60 லட்சத்து 44 ஆயிரத்து 825-க்கு விற்பனையானது.
கடந்த வாரத்தை விட இந்த வாரம் பருத்தி அதிக விலைக்கு ஏலம் போனதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தார்கள்.
கோவை, புளியம்பட்டி, அன்னூர், தேனி, பெருந்துறை, தருமபுரி, கொங்கணாபுரம், அந்தியூர் ஆகிய பகுதிகளில் இருந்து வியாபாரிகள் வந்து போட்டி போட்டு பருத்தியை ஏலம் எடுத்து சென்றார்கள்.
Related Tags :
Next Story