தாய்ப்பால் விழிப்புணர்வு வாகனம் கலெக்டர் தொடங்கி வைத்தார்


தாய்ப்பால் விழிப்புணர்வு வாகனம் கலெக்டர் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 15 Aug 2021 11:38 AM IST (Updated: 15 Aug 2021 11:38 AM IST)
t-max-icont-min-icon

காஞ்சீபுரம் மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்ட துறை சார்பில் உலக தாய்ப்பால் வார விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்ட துறை சார்பில் உலக தாய்ப்பால் வார விழா கொண்டாடப்பட்டு வருகிறது. தாய்ப்பால் குறித்து கர்ப்பிணி பெண்களுக்கு அதிக அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. தாய்ப்பால் ஊட்டுதல் உறுதி செய்தல் பொறுப்பினை அதிக அளவில் விழிப்புணர்வு செய்யும் வகையில் நகர, கிராமங்கள் தோறும் வாகனம் மூலம் பிரசாரம் செய்ய திட்டமிடப்பட்டு, மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில், இந்த வாகனத்தை மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இந்த வாகனத்தில் தாயின் சுகப்பிரசவம், குழந்தைகளுக்கு தாய்ப்பால் வழங்குவதால் ஏற்படும் நன்மைகள், தாய்மார்களுக்கு ஏற்படும் நன்மைகள், சிசேரியன் பிரசவத்திலும் உடனடியாக தாய்ப்பால் கொடுக்க வேண்டும்.

ஆரோக்கியமான குழந்தைக்கு தாய்ப்பால் அவசியம் உள்ளிட்டவை குறித்த விளம்பர பதாகைகள் ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டமிட்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் சற்குணா மற்றும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் பலர் பங்கேற்றனர்.
1 More update

Next Story