திண்டுக்கல்லில் சுதந்திர தினவிழா


திண்டுக்கல்லில் சுதந்திர தினவிழா
x
தினத்தந்தி 15 Aug 2021 10:10 PM IST (Updated: 15 Aug 2021 10:10 PM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல்லில் உள்ள பள்ளிகள் மற்றும் பல்வேறு இடங்களில் சுதந்திர தினவிழா நேற்று கொண்டாடப்பட்டது.

திண்டுக்கல்: 

எம்.எஸ்.பி. பள்ளி
திண்டுக்கல் எம்.எஸ்.பி. மேல்நிலைப்பள்ளியில் சுதந்திர தினவிழா நேற்று கொண்டாடப்பட்டது. இதற்கு பள்ளியின் ஆட்சிக்குழு தலைவர் மதிச்செல்வன் தலைமை தாங்கி தேசியக்கொடியை ஏற்றி வைத்தார். அதையடுத்து கொரோனா காலகட்டத்திலும் மாணவ-மாணவிகளுக்கு இணையதளம் மூலம் கல்வி கற்பித்த ஆசிரிய-ஆசிரியைகளை ஆட்சிக்குழு தலைவர் பாராட்டினார். இந்த விழாவில் பள்ளி தாளாளர் முருகேசன், துணை தலைவர் துரைசாமி, பொருளாளர் பட்டுமணி, துணை செயலாளர் கமலநாதன் மற்றும் ஆசிரிய-ஆசிரியைகள் சமூக இடைவெளியை கடைபிடித்து கலந்துகொண்டனர். ஊரடங்கு காரணமாக விழாவில் பங்கேற்க மாணவர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.


திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு அரங்கில் நடந்த சுதந்திர தினவிழாவில் கூட்டுறவு சங்க சார்பதிவாளர் சவுந்தரராஜன், கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் அலுவலகத்தில் பணியாற்றும் இளநிலை ஆய்வாளர் மோகனம் ஆகியோருக்கு சிறந்த பணியாளருக்கான விருது மற்றும் பாராட்டு சான்றிதழை கலெக்டர் விசாகன் வழங்கினார்.

நகர கூட்டுறவு வங்கி
திண்டுக்கல் நகர கூட்டுறவு வங்கியில் நடந்த சுதந்திர தினவிழாவில் வங்கி தலைவர் வீரமார்பன் தேசியக்கொடியை ஏற்றி வைத்தார். இதில் வங்கி பணியாளர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர். எஸ்.எம்.பி.எம். நேஷனல் பப்ளிக் பள்ளியில் நடந்த சுதந்திர தினவிழாவில் பள்ளி தலைவர் தர்மராஜன் தேசியக்கொடியை ஏற்றினார். விழாவில் பள்ளி தாளாளர் ராமதாஸ், துணை தலைவர் அன்பரசன், இணை செயலாளர் வெங்கடேசன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

திண்டுக்கல் மேற்கு ரோட்டரி சங்கம், திண்டுக்கல் கோட்டை ரோட்டரி சங்கம், குயின்சிட்டி ரோட்டரி சங்கம் ஆகியவை சார்பில் திண்டுக்கல் விவேகானந்தா நகரில் நடந்த சுதந்திர தினவிழாவில் சுதந்திர போராட்ட தியாகி பூலூர் செட்டியார் தேசியக்கொடியை ஏற்றி வைத்தார். அதையடுத்து சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு ரோட்டரி சங்கங்களின் நிர்வாகிகள் சால்வை அணிவித்து கவுரவித்தனர். இதில் தொழில் அதிபர் ஜி.சுந்தரராஜன், ரோட்டரி சங்க துணை கவர்னர் சஞ்சய்குமார், மேற்கு ரோட்டரி சங்க தலைவர் சண்முகம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

நுகர்வோர் பாதுகாப்பு மையம்
இதேபோல் தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு மையத்தின் திண்டுக்கல் கிளை அலுவலகத்தில் நடந்த சுதந்திர தினவிழாவில் மாநில இணை பொதுச்செயலாளர் சுப்பிரமணியம் தேசியக்கொடியை ஏற்றி வைத்தார். இதில் மாவட்ட செயலாளர் நாகராஜன் உள்பட பலர் கலந்துகொண்டனர். திண்டுக்கல் கிழக்கு மாவட்ட சிவாஜி மன்றத்தின் சார்பில் தாலுகா அலுவலக சாலையில் நடந்த சுதந்திர தினவிழாவில் துணை தலைவர் மாரியப்பன் தேசியக்கொடியேற்றினார். விழாவில் மாவட்ட தலைவர் திருப்பதி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

திண்டுக்கல் அச்யுதா குழும பள்ளிகளில் நடந்த சுதந்திர தினவிழாவில் பள்ளியின் முதன்மை முதல்வர் சந்திரசேகரன் தேசியக்கொடியை ஏற்றி வைத்தார். இதில் செயலாளர்கள் மங்கள்ராம், காயத்ரி மங்கள்ராம் உள்பட பலர் கலந்துகொண்டனர். இந்திய தேசிய காங்கிரஸ் கமிட்டி சார்பில் சின்னாளப்பட்டி காந்தி மைதானத்தில் நடந்த சுதந்திர தினவிழாவில் மாவட்ட துணை தலைவர் ராமசாமி தேசியக்கொடியை ஏற்றி வைத்தார். விழாவில் நகர தலைவர் கனகராஜ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

 பித்தளைப்பட்டியில் நடந்த விழாவில் காங்கிரஸ் கமிட்டி நிர்வாகி சவுந்தரராஜன் தேசியக்கொடியை ஏற்றி வைத்தார்.

காந்திஜி நினைவு பள்ளி
திண்டுக்கல் காந்திஜி நினைவு நடுநிலைப்பள்ளியில் நடந்த சுதந்திர தினவிழாவில் பள்ளி நிர்வாகி பத்மநாபன் தேசியக்கொடியை ஏற்றி வைத்தார். இதில் தலைமை ஆசிரியர் பாலாஜி சுப்பிரமணி உள்பட பலர் கலந்துகொண்டனர். தமிழ்நாடு காந்தி மன்ற இயக்கம் சார்பில் திண்டுக்கல் காமாட்சிநகரில் நடந்த சுதந்திர தினவிழாவில் மாநில செயலாளர் ஜெயசீலன் தேசியக்கொடியை ஏற்றி வைத்தார். இதில் அக்னி சிறகு மன்ற நிர்வாகி தேவா உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Next Story