கோபி அருகே மயானத்துக்கு செல்ல பாதை இல்லாததால் ஓடையின் குறுக்கே தற்காலிக பாலம் அமைத்து உடலை கொண்டு சென்ற கிராமமக்கள்


கோபி அருகே மயானத்துக்கு செல்ல பாதை இல்லாததால் ஓடையின் குறுக்கே தற்காலிக பாலம் அமைத்து உடலை கொண்டு சென்ற கிராமமக்கள்
x
தினத்தந்தி 16 Aug 2021 3:41 AM IST (Updated: 16 Aug 2021 3:41 AM IST)
t-max-icont-min-icon

கோபி அருகே மயானத்துக்கு செல்ல பாதை இல்லாததால் ஓடையின் குறுக்கே தற்காலிக பாலம் அமைத்து கிராமமக்கள் உடலை கொண்டு சென்றார்கள்.

கடத்தூர்
கோபி அருகே மயானத்துக்கு செல்ல பாதை இல்லாததால் ஓடையின் குறுக்கே தற்காலிக பாலம் அமைத்து கிராமமக்கள் உடலை கொண்டு சென்றார்கள்.
பாலம் அகற்றப்பட்டது
கோபி அருகே உள்ள சாணார்பதி பகுதியில் 120-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இங்கு 600-க்கும் மேற்பட்டடோர் வசித்து வருகின்றனர்.
 இந்த பகுதியில் உயிரிழந்தவர்களின் உடல்களை கீரிப்பள்ளம் ஓடையின் அக்கரையில் உள்ள மயானத்தில் அடக்கம் செய்வார்கள். இதற்காக ஓடையின் குறுக்கே பாலம் கட்டப்பட்டிருந்தது.
இந்த நிலையில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு ஓடையின் குறுக்கே கட்டப்பட்டிருந்த பாலம் பழுதடைந்தது. இதன் காரணமாக அந்த பாலம் அகற்றப்பட்டது. இதனால் பொதுமக்கள் அந்த வழியாக இறந்தவர்களின் உடலை கொண்டு் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதன் காரணமாக பொதுமக்கள் அவதிப்பட்டு் வந்தனர்.
தற்காலிகமாக...
இதைத்தொடர்ந்து ஓடையின் குறுக்கே மீண்டும் பாலம் அமைக்க முடிவு செய்தனர். இதையடுத்து பொதுமக்களிடம் இருந்து சுமார் ரூ.20 ஆயிரம் வரை நிதி வசூலித்து ஓடையின் குறுக்கே நேற்று காலை தற்காலிகமாக பாலம் அமைத்தனர். இதைத்தொடர்ந்து இறந்தவர்களின் உடல்களை சுமந்து கொண்டு தற்காலிகமாக அமைக்கப்பட்ட பாலம் வழியாக சென்று அக்கரையில் உள்ள மயானத்தில் அடக்கம் செய்து வருகின்றனர்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, ‘இடிக்கப்பட்ட பாலம் அமைக்க பலமுறை அரசுக்கு மனு அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. பாலம் கட்ட 3 முறைக்கும் மேல் பூமிபூஜை போட்டு்விட்டு் இதுவரை பணிகளை தொடங்கவில்லை. இதனால் இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்ய முடியாமல் அவதிப்படுகிறோம். எனவே ஓடையின் குறுக்கே நிரந்தர பாலம் அமைத்து தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

Next Story