சுதந்திர தின விழா கொண்டாட்டம்


சுதந்திர தின விழா கொண்டாட்டம்
x
தினத்தந்தி 16 Aug 2021 8:02 PM IST (Updated: 16 Aug 2021 8:02 PM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல், கொடைக்கானல் ஆகிய பகுதிகளில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.

கொடைக்கானல்: 

 சுதந்திர தின விழாவையொட்டி கொடைக்கானல் சன் அரிமா சங்கம் மற்றும் ஆனந்தகிரி 12-வது வார்டு பொது நல சங்கத்தின் சார்பில் சுதந்திர தின விழா நேற்று முன்தினம் நடந்தது. 

இதற்கு பொதுநல சங்கத்தின் செயலாளர் குணசேகரன் தலைமை தாங்கினார். சன் அரிமா சங்க தலைவர் ஜெரால்டு ராஜா மற்றும் பொது நல சங்கத்தை சேர்ந்த ராஜாராம், ஜேக்கப், அருள்ராஜ், ஜெயசீலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிர்வாகி பாக்கியசாமி வரவேற்றார். விழாவில் அரிமா சங்க கவர்னர் டி.பி.ரவீந்திரன் தேசியக்கொடியை ஏற்றி வைத்தார். 

பின்னர் ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் இனிப்புகளை வழங்கினார். நிகழ்ச்சியில் அரிமா சங்க முன்னாள் தலைவர் கிரண் ரவீந்திரன் மற்றும் நிர்வாகிகள் சாமுவேல், அண்ணாதுரை, ராமலட்சுமி உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் முன்னாள் கவுன்சிலர் ஆஷா ரவீந்திரன் நன்றி கூறினார்.


இதேபோல் திண்டுக்கல் ரவுண்டு ரோடு ராம்நகர் மஸ்ஜித்தே நூர் பள்ளிவாசலில் சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது. இதற்கு திண்டுக்கல் மாவட்ட அரசு டவுன் ஹாஜி மற்றும் மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபையின் தலைவர் முகமது அலி தலைமை தாங்கி தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.

 நல்லமநாயக்கன்பட்டி பங்குத்தந்தை பிலிப்ஸ் சுதாகர், வள்ளலார் சன்மார்க்க சங்க தலைவர் சந்திரன், பிரம்ம குமாரிகள் சங்க நிர்வாகி சிவா ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

விழாவில் பேகம்பூர் தலைமை இமாம் அபூபக்கர் மற்றும் இமாம்கள் அப்துர் ரகீம், அப்துல் ரகுமான், நவுஷாத் அலி, காதர் பாட்சா மற்றும் பள்ளிவாசல் நிர்வாகிகள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story