ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 170 பேருக்கு கொரோனா


ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 170 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 17 Aug 2021 2:23 AM IST (Updated: 17 Aug 2021 2:23 AM IST)
t-max-icont-min-icon

ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 170 பேருக்கு கொரோனா ஏற்பட்டது.

ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் நேற்று முன்தினம் 9 ஆயிரத்து 868 பேருக்கு பரிசோதனை செய்ததில், 179 பேருக்கு கொரோனா தொற்று இருந்தது. இந்த நிலையில் நேற்று ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 170 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது. இதனால் மாவட்டத்தில் மொத்த பாதிப்பு 96 ஆயிரத்து 417 ஆக உயர்ந்தது.
மேலும் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 151 பேர் நேற்று குணமடைந்து வீடு திரும்பினர். மாவட்டத்தில் இதுவரை 93 ஆயிரத்து 942 பேர் கொரோனா தொற்றில் இருந்து மீண்டு உள்ளனர். மாவட்டத்தில் கொரோனாவுக்கு இதுவரை 642 பேர் பலியாகி உள்ள நிலையில், தற்போது தொற்று உள்ள 1,833 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

Next Story