கர்நாடக மாநிலத்தில் இருந்து அதிக அளவில் வந்ததால் அந்தியூர் வாரச்சந்தையில் சின்ன வெங்காயம் விலை குறைந்தது


கர்நாடக மாநிலத்தில் இருந்து அதிக அளவில் வந்ததால் அந்தியூர் வாரச்சந்தையில் சின்ன வெங்காயம் விலை குறைந்தது
x
தினத்தந்தி 17 Aug 2021 2:28 AM IST (Updated: 17 Aug 2021 2:28 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடக மாநிலத்தில் இருந்து அதிக அளவில் வந்ததால் அந்தியூர் வாரச்சந்தையில் சின்ன வெங்காயம் விலை குறைந்தது.

அந்தியூர்
அந்தியூரில் வாரச்சந்தை திங்கட்கிழமை தோறும் நடைபெறும். அதன்படி நேற்று வழக்கமான வாரச்சந்தை நடைபெற்றது. இந்த சந்தைக்கு பல்வேறு இடங்களில் இருந்து விவசாயிகள், வியாபாரிகள் தங்களுடைய காய்கறிகள் மற்றும் மளிகை பொருட்களை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். மேலும் கால்நடைகளுக்கு தேவையான கயிறு மற்றும் அலங்கார பொருட்களும் விற்பனைக்காக கொண்டு வரப்படும். 
இதேபோல் இந்த சந்தைக்கு கர்நாடக மாநிலம் ராமாபுரத்தில் இருந்து ஏராளமான மூட்டைகளில் சின்ன வெங்காயத்தை விவசாயிகள் விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். சின்ன வெங்காயம் அதிக அளவில் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டதால் அது விலை குறைந்து விற்பனை ஆனது. 
கடந்த 2 வாரங்களுக்கு முன்பு சின்ன வெங்காயம் கிலோ ஒன்று ரூ.60 முதல் ரூ.70 வரை விற்பனை ஆனது. ஆனால் நேற்று கிலோ ஒன்று ரூ.25 முதல் ரூ.30 வரை விற்பனை செய்யப்பட்டது. விலை குறைந்து காணப்பட்டதால் சின்ன வெங்காயத்தை ஏராளமான பொதுமக்கள் விரும்பி வாங்கி சென்றனர். 

Next Story