சத்தியமங்கலம் மார்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோ ரூ.805-க்கு ஏலம்


சத்தியமங்கலம் மார்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோ ரூ.805-க்கு ஏலம்
x

சத்தியமங்கலம் மார்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோ ரூ.805-க்கு ஏலம் போனது.

சத்தியமங்கலம்
சத்தியமங்கலத்தில் உள்ள கரட்டூர் ரோட்டில் பூ மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இந்த மார்க்கெட்டில் தினமும் காலை 7 மணி முதல் மதியம் 2 மணி வரை பூக்கள் ஏலம் நடைபெறும். அதன்படி நேற்று ஏலம் நடைபெற்றது. இந்த ஏலத்துக்கு சத்தியமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த 35 கிராமங்களில் இருந்து ஏராளமான விவசாயிகள் 3½ டன் பூக்களை கொண்டு வந்திருந்தனர். 
மல்லிகைப்பூ கிலோ ஒன்று ரூ.805-க்கும், முல்லை ரூ.240-க்கும், காக்கடா ரூ.650-க்கும், செண்டுமல்லி ரூ.77-க்கும், பட்டுப்பூ ரூ.60-க்கும், ஜாதிமல்லி ரூ.450-க்கும், கனகாம்பரம் ரூ.700-க்கும், சம்பங்கி ரூ.90-க்கும், அரளி ரூ.100-க்கும், துளசி ரூ.40-க்கும், செவ்வந்தி ரூ.200-க்கும் ஏலம் போனது.

Next Story