தொடர் டீசல் விலை உயர்வால் ரிக் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்


தொடர் டீசல் விலை உயர்வால் ரிக் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்
x

தொடர் டீசல் விலை உயர்வு காரணமாக கோபியில் ரிக் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடத்தூர்
தொடர் டீசல் விலை உயர்வு காரணமாக கோபியில் ரிக் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். 
டீசல் விலை உயர்வு 
தமிழகத்தில் ஈரோடு மாவட்டத்தில் கோபி, திருப்பூர் மாவட்டத்தில் குன்னத்தூர், நாமக்கல் மாவட்டத்தில் திருச்செங்கோடு ஆகிய பகுதியில் தான் ஆழ்குழாய் கிணறு தோண்டும் பணியில் ஈடுபடுத்தபடும் ரிக் லாரிகள் அதிக அளவில் உள்ளது. இந்த பகுதியில் இருந்துதான் இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு மாநிலங்களில் ஆழ்குழாய் கிணறு அமைக்க ரிக் லாரிகள் அனுப்பி வைக்கப்படுகின்றன. 
இந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக டீசல் விலை தொடர்ந்து நாள்தோறும் உயர்ந்து வருகிறது. இதன்காரணமாக ஆழ்குழாய் கிணறு தோண்டும் தொழிலில் ஈடுபட்ட ரிக் லாரி உரிமையாளர்கள் மிகவும் அவதிப்பட்டனர். மேலும் அவர்களால் தொழில் நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. 
வேலைநிறுத்தம்
இதைத்தொடர்ந்து கோபி, சத்தியமங்கலம், நம்பியூர் ஆகிய பகுதிகளை சேர்ந்த ரிக் லாரி உரிமையாளர்கள் அனைவரும் தங்களுடைய வாகனங்களை கோபி அருகே உள்ள கரட்டடிபாளையத்தில் வரிசையாக நிறுத்தி வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.  
இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்ட ரிக் லாரி உரிமையாளர்கள் கூறுகையில், ‘ஆழ் குழாய் கிணறு அமைக்க ஒரு மணி நேரத்துக்கு சராசரியாக 80 முதல் 100 லிட்டர் டீசல் தேவைப்படுகிறது. 500 அடி ஆழத்திற்கு ஆழ் குழாய் கிணறு அமைக்க வேண்டும் என்றால் சராசரியாக 500 முதல் 600 லிட்டர் டீசல் தேவைப்படுகிறது.
2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட...
மேலும் ரிக் லாரியில் கூலி ேவலைக்கு சராசரியாக 5 முதல் 7 ஆட்கள் வரை தேவைப்படுகிறது. கூலி ஆட்களுக்கு சம்பளம், டீசல் என நாள்தோறும் பல ஆயிரம் ரூபாய் தேவைப்படுகிறது. இதே நிலைமை நீடித்தால் தொழிலையே நடத்த முடியாத நிலை ஏற்படும். எனவே டீசல் விலை உயர்வை குறைக்க மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என்றனர். 
ரிக் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்த போராட்டம் காரணமாக 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு வேலை இழப்பு ஏற்பட்டுள்ளது.

Next Story