தினத்தந்தி செய்தி எதிரொலி ஓடையின் குறுக்கே அமைக்கப்பட்ட பாலத்தை மாவட்ட வருவாய் அதிகாரி ஆய்வு
தினத்தந்தி செய்தி எதிரொலியால் கோபி அருகே கீரிப்பள்ளம் ஓடையின் குறுக்கே அமைக்கப்பட்ட தற்காலிக பாலத்தை மாவட்ட வருவாய் அதிகாரி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கோபி
தினத்தந்தி செய்தி எதிரொலியால் கோபி அருகே கீரிப்பள்ளம் ஓடையின் குறுக்கே அமைக்கப்பட்ட தற்காலிக பாலத்தை மாவட்ட வருவாய் அதிகாரி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பாலம்
கோபி அருகே உள்ள சாணார்பதி பகுதியில் 600-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இங்கு உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்ய கீரிப்பள்ளம் ஓடையின் அக்கரையில் உள்ள மயானத்துக்கு அந்த பகுதியை சேர்ந்தவர்கள் கொண்டு செல்வார்கள். உடல்களை பொதுமக்கள் சுமந்து செல்வதற்காக கீரிப்பள்ளம் ஓடையின் குறுக்கே பாலம் கட்டப்பட்டிருந்தது.
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட பழுது காரணமாக அந்த பாலம் அகற்றப்பட்டது. இதனால் இறந்தவர்களின் உடலை கொண்டு் செல்ல முடியாமல் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அவதிப்பட்டு் வந்தனர்.
கோரிக்கை
இதைத்தொடர்ந்து ஓடையின் குறுக்கே மீண்டும் பாலம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக பொதுமக்களே நிதி வசூலித்து ஓடையின் குறுக்கே தற்காலிக பாலம் அமைத்தனர். இதையடுத்து இறந்தவர்களின் உடல்களை தற்காலிக பாலம் வழியாக மயானத்துக்கு கொண்டு சென்று பொதுமக்கள் அடக்கம் செய்தனர்.
மேலும் கீரிப்பள்ளம் ஓடையின் குறுக்கே நிரந்தர பாலம் கட்டவேண்டும் எனவும் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதுபற்றிய செய்தி நேற்று தினத்தந்தியில் பிரசுரமாகி இருந்தது.
ஆய்வு
இந்த நிலையில் சாணார்பகுதியில் உள்ள கீரிப்பள்ளம் ஓடை பகுதிக்கு மாவட்ட வருவாய் அதிகாரி முருகேசன் நேரில் சென்றார். பின்னர் அவர் அங்கு அமைக்கப்பட்டிருந்த தற்காலிக பாலத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இதுபற்றி அறிந்ததும் அங்கு வந்த பொதுமக்கள், மாவட்ட வருவாய் அதிகாரி முருகேசனிடம் கூறுகையில், ‘கடந்த 100 ஆண்டுகளுக்கும் மேலாக இ்ந்த பகுதியில் வசித்து வருகிறோம். பாலம் இருந்ததால், இறந்தவர்களின் உடல்களை அதன் வழியாக மயானத்துக்கு எடுத்து சென்று அடக்கம் செய்து வந்தோம். பாலம் பழுதடைந்ததால் அப்புறப்படுத்தப்பட்டது. நாங்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பல முறை கோரிக்கை வைத்தும் இதுவரை பாலம் கட்டி கொடுக்கப்படவில்லை. இதனால் நாங்களே தற்காலிக பாலம் அமைத்து அதன் வழியாக சென்று இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்தோம். நிரந்தர பாலம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என்றனர்.
அதற்கு பொதுமக்களிடம் பதில் அளித்த மாவட்ட வருவாய் அதிகாரி முருகேசன் கூறுகையில், ‘உரிய துறை அதிகாரிகளுடன் கலந்து பேசி இந்த பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணப்படும்,’ என்றார்.
Related Tags :
Next Story