கும்மிடிப்பூண்டி அருகே பரிதாபம் மோட்டார் சைக்கிள் மீது டிராக்டர் மோதல்; பால் வியாபாரி சாவு


கும்மிடிப்பூண்டி அருகே பரிதாபம் மோட்டார் சைக்கிள் மீது டிராக்டர் மோதல்; பால் வியாபாரி சாவு
x
தினத்தந்தி 17 Aug 2021 2:36 PM IST (Updated: 17 Aug 2021 2:36 PM IST)
t-max-icont-min-icon

கும்மிடிப்பூண்டி அருகே மோட்டார் சைக்கிள் மீது டிராக்டர் மோதிய விபத்தில் பால் வியாபாரி பரிதாபமாக உயிரிழந்தார்.

கும்மிடிப்பூண்டி,

கும்மிடிப்பூண்டி அடுத்த காயலார்மேடு கிராமத்தை சேர்ந்தவர் நேமராஜ் (வயது 53). பால் வியாபாரி. இவருக்கு திருமணமாகி 2 மகன்களும், 2 மகள்களும் உள்ளனர். இவர், நேற்று தனது மோட்டார் சைக்கிளில் பால் கேனை ஏற்றிக்கொண்டு வியாபாரத்திற்காக சென்னை நோக்கி சென்றார்.

புதுவாயலில் உள்ள மேம்பாலத்தில் மோட்டார் சைக்கிள் சென்று கொண்டிருந்தபோது, சிமெண்ட் கற்களை ஏற்றிக்கொண்டு டிராக்டர் ஒன்று முன்னால் சென்று கொண்டிருந்தது. அப்போது, பாரம் காரணமாக டிராக்டர் மேம்பாலத்தில் ஏற முடியாமல் திடீரென பின்நோக்கி இறங்கி வந்ததில், மோட்டார் சைக்கிளின் மீது மோதியது.

வியாபாரி பலி

இதை கவனிக்காததால் மோட்டார் சைக்கிளை ஓட்டிச்சென்ற நேமராஜ் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதையறிந்த கவரைப்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து நேமராஜ் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து கவரைப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story