வாலிபர் தற்கொலை


வாலிபர் தற்கொலை
x
தினத்தந்தி 18 Aug 2021 2:02 AM IST (Updated: 18 Aug 2021 2:02 AM IST)
t-max-icont-min-icon

ஆசையாக வாங்கிய காரை விற்றதால் வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.

மதுரை, 
மதுரை சம்மட்டிபுரம், ஸ்ரீராம்நகரை சேர்ந்தவர் சங்கரலிங்கம். இவரது மகன் முனீஸ்வரன் (வயது 27). கடந்த சில நாட்களுக்கு முன்பு இவர் பழைய கார் ஒன்றை விலைக்கு வாங்கினார். அந்த காரின் நிறம் பிடிக்க வில்லை என்று அவரது தந்தை அதனை விற்க முடிவு செய்தார். ஆனால் முனீஸ்வரன் ஆசையாக தான் வாங்கிய காரை விற்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். சம்பவத்தன்று முனீஸ்வரன் வெளியூர் சென்றிருந்தார். அந்த நேரத்தில் சங்கரலிங்கம் அந்த காரை அவருக்கு தெரியாமல் விற்று விட்டார். ஊருக்கு வந்த பிறகு வீட்டில் கார் இல்லாமல் இருப்பதையும், அதனை விற்பனை செய்ததையும் அறிந்து முனீஸ்வரன் மிகவும் வருத்தம் அடைந்தார். அந்த காரை நினைத்து கொண்டே இருந்த அவர் திடீரென்று வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து எஸ்.எஸ்.காலனி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story