மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதி 2 பேர் பலி


மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதி 2 பேர் பலி
x
தினத்தந்தி 18 Aug 2021 2:16 AM IST (Updated: 18 Aug 2021 2:16 AM IST)
t-max-icont-min-icon

மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதி 2 பேர் பலியாகினர்.

வாடிப்பட்டி, 
வாடிப்பட்டி அருகே அய்யங்கோட்டை நடுத்தெருவை சேர்ந்தவர் துரைபாண்டி. இவரது மகன் சதீஷ் (வயது 24). இவரும் அதே ஊர் மேற்கு தெருவை சேர்ந்த கருப்புசாமியும் மோட்டார் சைக்கிளில் அய்யங் கோட்டை சந்திப்பில் நான்கு வழிச் சாலையை கடக்க முயன்ற போது மதுரையில் இருந்து திண்டுக்கல் நோக்கி சென்ற அரசு பஸ் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் சதீஷ் படுகாயம் அடைந்து சம்பவ இடத் திலேயே பலியானார். கருப்புசாமி படுகாயத்துடன் வாடிப்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இதுகுறித்து வாடிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சிவபாலன், சப்-இன்ஸ் பெக்டர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து அரசு பஸ் டிரைவர் கோயம்புத்தூரை சேர்ந்த நடராஜன் (46) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story