ஆபாச குறுந்தகவல் அனுப்பி தொல்லை கொடுத்தவர் கைது


ஆபாச குறுந்தகவல் அனுப்பி தொல்லை கொடுத்தவர் கைது
x
தினத்தந்தி 18 Aug 2021 2:20 AM IST (Updated: 18 Aug 2021 2:20 AM IST)
t-max-icont-min-icon

ஆபாச குறுந்தகவல் அனுப்பி தொல்லை கொடுத்தவர் கைது செய்யப்பட்டார்.

புதூர், 
மதுரை ஒத்தக்கடையை சேர்ந்தவர் ஓம்குமார் (வயது 43). இவருக்கு தொடர்ந்து ஆபாச குறுந்தகவல் வந்துள்ளது. இதையடுத்து அதை அனுப்பிய வாலிபரின் செல்போனுக்கு தொடர்பு கொண்டு கண்டித்துள்ளார். அதை பொருட்படுத்தாமல் தொடர்ந்து மாதக் கணக்கில் ஓம்குமாருக்கு ஆபாச குறுந்தகவல் அனுப்பி உள்ளார். இதையடுத்து அவர் ஒத்தக்கடை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ஆனந்ததாண்டவம் குறுந்தகவல் அனுப்பிய வாலிபரை பிடிக்க சப்-இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமிக்கு உத்தரவிட்டார். செல்போன் எண்ணை ஆய்வு செய்து சிக்னலை சரிபார்த்தபோது சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த சுந்தர்ராஜன் என்பவர் வீட்டின் அருகில் சிக்னல் காண்பித்தது. உடனே சிவகங்கைக்கு தனிப்படை போலீசார் சென்று சுந்தர்ராஜன் மகன் சிவா என்ற வாலிபரை பிடித்து விசாரித்தனர். அவர் ஆபாச குறுந்தகவல் அனுப்பியதை ஒப்புக் கொண்டார். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். இதுகுறித்து போலீசார் கூறும்போது, பொழுதை கழிக்க தேவையில்லாமல் மற்றவர்களுக்கு ஆபாச குறுந்தகவல் அனுப்புவது, ஆபாச படங்களை பார்ப்பது, செல்போன் செயலியில் டவுன்லோட் செய்வது குற்றமாகும். செல்போன் ஷேர் சாட், டிக் டாக்கில் ஆபாச வசன வீடியோக்களை பகிர்ந்து கொள்வது பற்றி போலீசார் கண்காணித்து வருகின்றனர். இதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபடுவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

Related Tags :
Next Story