இலவச மாணவர் சேர்க்கைக்கு குலுக்கல்
மதுரை மாவட்ட தனியார் பள்ளிகளில் கட்டாய கல்வி சட்டத்தின்படி இலவச மாணவர் சேர்க்கைக்கு குலுக்கல் நடைபெறுகிறது.
மதுரை,
மதுரை மாவட்ட தனியார் பள்ளிகளில் கட்டாய கல்வி சட்டத்தின்படி இலவச மாணவர் சேர்க்கைக்கு குலுக்கல் நடைபெறுகிறது.
மாணவர் சேர்க்கை
மதுரை மாவட்டத்தில் இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் படி தனியார் பள்ளிகளுக்கான மாணவர் சேர்க்கை விண்ணப்பங்கள் இறுதி செய்யப்பட்டு உள்ளன. அதன்படி, மதுரை மாவட்டத்தில் உள்ள 343 தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு 18,347 பேர் விண்ணப்பித்துள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் தங்களது வீடுகளுக்கு அருகில் உள்ள தனியார் பள்ளிகள் அனைத்திற்கும் விண்ணப்பம் செய்துள்ளனர்.
ஆனால், இந்த சட்டத்தின்படி, 5,370 இடங்கள் மட்டுமே உள்ளன. எனவே, மதுரை மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் விண்ணப் பித்துள்ள பெற்றோர்களுக்கு அந்தந்த பள்ளி வளாகத்திலேயே நாளை (வியாழக்கிழமை) குலுக்கல் நடைபெறுகிறது.
அனுமதி
இதற்காக மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் சுவாமிநாதன் உத்தரவின் பேரில், கல்வித்துறை அதிகாரிகள் அந்தந்த பள்ளிகளில் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். அவர்களது முன்னிலையில், குலுக்கல் நடைபெறும். குலுக்கலில் தேர்ந்தெடுக்கப்படும் மாணவ- மாணவிகளுக்கு இந்த சட்டத்தின் கீழ் இலவச மாணவர் சேர்க்கை அனுமதி கிடைக்கும்.
Related Tags :
Next Story