கொடுமுடி, அந்தியூர், வெப்பிலியில் ரூ.98¼ லட்சத்துக்கு விவசாய விளைபொருட்கள் ஏலம்


கொடுமுடி, அந்தியூர், வெப்பிலியில் ரூ.98¼ லட்சத்துக்கு விவசாய விளைபொருட்கள் ஏலம்
x
தினத்தந்தி 18 Aug 2021 3:00 AM IST (Updated: 18 Aug 2021 3:00 AM IST)
t-max-icont-min-icon

கொடுமுடி, அந்தியூர், வெப்பிலி ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் ரூ.98¼ லட்சத்துக்கு விவசாய விளைபொருட்கள் ஏலம் போனது.

ஈரோடு
கொடுமுடி, அந்தியூர், வெப்பிலி ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் ரூ.98¼ லட்சத்துக்கு விவசாய விளைபொருட்கள் ஏலம் போனது. 
ஏலம்
கொடுமுடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் சாலைப்புதூரில் செயல்பட்டு வருகிறது. இந்த விற்பனைக்கூடத்துக்கு கொடுமுடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான விவசாயிகள் தங்களுடைய விவசாய விளைபொருட்களை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர்.
8 ஆயிரத்து 246 தேங்காய்கள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டிருந்தன. இது கிலோ ஒன்று குறைந்தபட்ச விலையாக 24 ரூபாய் 15 காசுக்கும், அதிகபட்ச விலையாக 28 ரூபாய் 25 காசுக்கும் என மொத்தம் ரூ.78 ஆயிரத்து 554-க்கு விற்பனை ஆனது.
ரூ.43¼ லட்சம்  
கொப்பரை தேங்காய்கள் 905 மூட்டைகளில் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டிருந்தது. இதில் முதல் தரம் கொப்பரை தேங்காய் கிலோ ஒன்று குறைந்தபட்ச விலையாக 103 ரூபாய் 89 காசுக்கும், அதிகபட்ச விலையாக 106 ரூபாய் 70 காசுக்கும், 2-ம் தரம் கொப்பரை தேங்காய் குறைந்தபட்ச விலையாக 81 ரூபாய் 36 காசுக்கும், அதிகபட்ச விலையாக 104 ரூபாய் 30 காசுக்கும் என மொத்தம் ரூ.42 லட்சத்து 58 ஆயிரத்து 950-க்கு விற்பனை செய்யப்பட்டது.   விவசாய விளைபொருட்கள் மொத்தம் ரூ.43 லட்சத்து 37 ஆயிரத்து 504-க்கு ஏலம் போனது.
அந்தியூர்
இதேபோல் அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் விவசாய விளைபொருட்கள் ஏலம் நடைபெற்றது. இந்த ஏலத்துக்கு அந்தியூர், அத்தாணி, ஆப்பக்கூடல், ஒலகடம், சென்னம்பட்டி, ஜரத்தல், பர்கூர் மற்றும் கர்நாடக மாநிலம் ராமாபுரம் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் தங்களுடைய விவசாய விளைபொருட்களை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர்.  5 ஆயிரம் தேங்காய்கள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டிருந்தது. இதில் சிறிய தேங்காய் ஒன்று 7 ரூபாய் 16 காசுக்கும், பெரிய தேங்காய் ஒன்று 17 ரூபாய் 31 காசுக்கும் என மொத்தம் ரூ.51 ஆயிரத்து 982-க்கு விற்பனை செய்யப்பட்டது. 
கொப்பரை தேங்காய்
கொப்பரை தேங்காய்கள் 108 மூட்டைகளில் விவசாயிகள் விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். இது குவிண்டால் ஒன்று குறைந்தபட்ச விலையாக ரூ.9 ஆயிரத்து 6-க்கும், அதிகபட்ச விலையாக ரூ.10 ஆயிரத்து 739-க்கும் என மொத்தம் ரூ.37 ஆயிரத்து 487-க்கு விற்பனை ஆனது. 17 மூட்டைகளில் எள்ளை விவசாயிகள் விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். இது குவிண்டால் ஒன்று குறைந்தபட்ச விலையாக ரூ.7 ஆயிரத்து 669-க்கும், அதிகபட்ச விலையாக ரூ.9 ஆயிரத்து 393-க்கும் என மொத்தம் ரூ.58 ஆயிரத்து 435-க்கு விற்கப்பட்டது. 
மக்காச்சோளம் 4 மூட்டைகளில் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டிருந்தது. இது குவிண்டால் ஒன்று குறைந்தபட்ச விலையாக ரூ.1,980-க்கும், அதிகபட்ச விலையாக ரூ.1,981-க்கும் என மொத்தம் ரூ.6 ஆயிரத்துக்கு ஏலம் போனது. 
ரூ.53¼ லட்சம்
 2 ஆயிரத்து 207 மூட்டைகளில் பருத்தியை விவசாயிகள் விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். இது குவிண்டால் ஒன்று குறைந்தபட்ச விலையாக ரூ.6 ஆயிரத்து 929-க்கும், அதிகபட்ச விலையாக ரூ.7 ஆயிரத்து 829-க்கும் என மொத்தம் ரூ.48 லட்சத்து 23 ஆயிரத்து 408-க்கு விற்பனை ஆனது.  விவசாய விளைபொருட்கள் மொத்தம் ரூ.53 லட்சத்து 15 ஆயிரத்துக்கு ஏலம் போனது.
வெப்பிலி
சென்னிமலை அருகே உள்ள வெப்பிலி துணை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் தேங்காய் ஏலம் நடந்தது. இந்த ஏலத்துக்கு சென்னிமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சோந்த ஏராளமான விவசாயிகள் 14 ஆயிரத்து 749 தேங்காய்களை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். விற்பனைக்கூட கண்காணிப்பாளர் லட்சுமணன் முன்னிலையில் ஏலம் நடைபெற்றது. 
இது கிலோ ஒன்று குறைந்தபட்ச விலையாக 25 ரூபாய் 27 காசுக்கும், அதிகபட்ச விலையாக 31 ரூபாய் 91 காசுக்கும் என மொத்தம் ரூ.1 லட்சத்து 74 ஆயிரத்து 585-க்கு ஏலம் போனது. 
கொடுமுடி, அந்தியூர், வெப்பிலி ஆகிய ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் ரூ.98 லட்சத்து 27 ஆயிரத்து 89-க்கு விவசாய விளைபொருட்கள் ஏலம் போனது.

Next Story