டி.என்.பாளையம் அருகே சந்தன மரக்கட்டைகளை விற்க முயன்ற 5 பேருக்கு அபராதம்


டி.என்.பாளையம் அருகே சந்தன மரக்கட்டைகளை விற்க முயன்ற 5 பேருக்கு அபராதம்
x
தினத்தந்தி 18 Aug 2021 3:08 AM IST (Updated: 18 Aug 2021 3:08 AM IST)
t-max-icont-min-icon

டி.என்.பாளையம் அருகே சந்தன மரக்கட்டைகளை விற்பனை செய்ய முயன்ற 5 பேருக்கு வனத்துறையினர் அபராதம் விதித்தனர்.

டி.என்.பாளையம்
டி.என்.பாளையம் அருகே சந்தன மரக்கட்டைகளை விற்பனை செய்ய முயன்ற 5 பேருக்கு வனத்துறையினர் அபராதம் விதித்தனர்.
ரகசிய தகவல்  
டி.என்.பாளையம் அருகே உள்ள வாணிப்புத்தூர் பகுதியில் சந்தன மரக்கட்டைகள் விற்பனை செய்யப்படுவதாக டி.என்.பாளையம் வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. 
தகவல் கிடைத்ததும் வனத்துறையினர் வாணிப்புத்தூர் பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சந்தேகப்படும் வகையில் நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர். 
அபராதம்
விசாரணையில், ‘அவர் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த அம்ஜத் அலி (வயது 43) என்பதும், டி.என்.பாளையத்தை அடுத்த கொண்டயம்பாளையத்தை சேர்ந்த தங்கராஜ் (56), தனுஷ்கோடி (30), அம்மாவாசை (56) மற்றும் எருமைக்குட்டை பகுதியை சேர்ந்த நாகப்பன் (46) ஆகியோர்கள் மூலம் தனியார் நிலத்தில் இருந்து வெட்டி எடுத்து வரப்பட்ட சந்தன மரக்கட்டைகளை விலைக்கு வாங்க வந்ததும்,’ தெரியவந்தது. இதையடுத்து சந்தன மரக்கட்டைகளை அம்ஜத் அலியிடம் விற்க முயன்றதாக தங்கராஜ், தனுஷ்கோடி, அம்மாவாசை, நாகப்பன் ஆகியோரையும் வனத்துறையினர் பிடித்தனர். இதைத்தொடர்ந்து அவர்களிடம் இருந்த 19 கிலோ சந்தன மரக்கட்டைகளை வனத்துறையினர் பறிமுதல் செய்ததுடன், அவர்கள் 5 பேருக்கும் சேர்ந்த்து மொத்தம் ரூ.70 ஆயிரம் அபராதம் விதித்தனர். 

Next Story