தாளவாடி அருகே சிறுத்தையை பிடிக்க கூண்டு அமைப்பு


தாளவாடி அருகே சிறுத்தையை பிடிக்க கூண்டு அமைப்பு
x
தினத்தந்தி 18 Aug 2021 3:49 AM IST (Updated: 18 Aug 2021 3:49 AM IST)
t-max-icont-min-icon

தாளவாடி அருகே சிறுத்தையை பிடிக்க கூண்டு அமைக்கப்பட்டு்ள்ளது.

தாளவாடி
தாளவாடி அருகே சிறுத்தையை பிடிக்க கூண்டு அமைக்கப்பட்டு்ள்ளது.
சிறுத்தை அட்டகாசம்
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உள்பட்ட தாளவாடி வனச்சரகத்தில் அமைந்துள்ள மலைக்கிராமம் தொட்டகாஜனூர், பீம்ராஜ்நகர், சூசைபுரம், மல்குத்திபுரம்.
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இங்குள்ள கல்குவாரி பகுதியில் சிறுத்தை பதுங்கி இருந்து கிராமத்துக்குள் புகுந்து ஆடு, மாடு, நாய்களை அடித்து கொன்று அட்டகாசம் செய்து வந்தது. இதனால் அட்டகாசம் செய்யும் சிறுத்தையை பிடிக்க வனத்துறை பல்வேறு இடங்களில் கூண்டு வைத்தனர். ஆனால் சிறுத்தை அகப்படவில்லை.
கூண்டு அமைப்பு
 இந்த நிலையில் நேற்று முன்தினம் சூசைபுரம் அருகில் உள்ள கல்குவாரியில் சிறுத்தை நடமாடியதை அப்பகுதி விவசாயிகள் பார்த்துள்ளனர். இதுபற்றி தாளவாடி வனத்துறைக்கு பொதுமக்கள் தகவல் அளித்தனர்.
இதைத்தொடர்ந்து நேற்று மதியம் சம்பவ இடத்துக்கு தாளவாடி வனச்சரகர் சதீஷ் மற்றும் வனத்துறையினர் சென்று கல்குவாரியில் பதிவாகி இருந்த கால்தடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.  அப்போது அது சிறுத்தையின் கால்தடம் தான் என்பதை வனத்துறையினர் உறுதி செய்தனர். இதைத்தொடர்ந்து சிறுத்தையை பிடிக்க வனத்துறை சார்பில் கூண்டு வைக்கப்பட்டு உள்ளது.

Next Story